கோபி பி.கே.ஆர் மகளிர் கல்லூரியில் மகாகவி பாரதியார் பிறந்த நாள் விழா நடைபெற்றது.
இவ்விழாவில் கல்லூரியின் தாளாளர் பி.என்.வெங்கடாச்சலம் தமிழ்த் துறைத் தலைவர் க.உமா மகேஸ்வரி துணை முதல்வர் எஸ்.ஏ.தனலட்சுமி சிறப்பு விருந்தினர் மகாகவி பாரதியாரின் எள்ளுப் பேரன், கவிஞர் மற்றும் திரைப்படப் பாடலாசிரியர் நிரஞ்சன்பாரதி உதவிப் பேராசிரியர் ச.அரிய நாச்சியம்மாள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நிகழ்ச்சியில் தமிழ் ஆர்வலர் திருமலைசாமி எழுதிய ‘இல்லறமே நல்லறம், கல்லூரி மாணவி செல்வி சுபாஷினி எழுதிய ‘சிந்தனைச் சிறகுகள் ஆகிய இருநூல்கள் வெளியிடப் பட்டன.



