நாமக்கல் அடுத்த நா.புதுப்பட்டியில் ரான்சம் அறக்கட்டளை சார்பாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டப்பட்டது.
கோவையைத் தலைமையிடமாகக் கொண்ட ரான்சம் அறக்கட்டளை சார்பில், நாமக்கல் மாவட்டம் நா.புதுப்பட்டி பகுதியின் தன்னார்வலர்கள் மற்றும் நாமக்கல் எஸ்.எஸ்.ஏ. ஏனென்ஸி மோகன், கொங்குநாடு பொறியியல் கல்லூரி பேராசிரியர்கள், இணைந்து, கிறிஸ்துமஸ் கொண்டாட்டம் நடைபெற்றது.
இதில் சிறப்பு விருந்தினராக அதிமுக மாநில வர்த்தகர் அணி இணை செயலாளரும், நாமக்கல் சாரா குரூப்ஸ் நிறுவனருமான ஸ்ரீ தேவி மோகன் கலந்து கொண்டு மூத்த குடிமக்கள் 250 பேருக்கு பெட்ஷீட்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு கிறிஸ்துமஸ் பரிசு பொருட் களை வழங்கினார்.
அவர் பேசுகையில்… “ஏழைகள் மற்றும் பின்தங்கியவர்களுடன் மகிழ்ச்சியைப் பகிர்வதே கிறிஸ்துமஸின் உண்மையான சாரம்” என நெகிழ்ச்சியுடன் வலியுறுத்தினார்.
இந்நிகழ்வில் ரான்சம் அறக்கட்டளை நிறுவனர் ஜாய்சன், அறக்கட்டளை நிர்வாகிகள், நா.புதுப்பட்டி தன்னார்வலர்கள், ஊர் பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.
நடனம் மற்றும் கலாச்சார நிகழ்வுகள் நடைபெற்றன.
நிகழ்ச்சியை நாமக்கல் எஸ்.எஸ்.அக்ரோடெக் நிறுவனர் ரெக்ஸ் தொகுத்து வழங்கினார்.



