fbpx
Homeபிற செய்திகள்சேறும் சகதியுமாக காட்சி தரும் நேதாஜி தினசரி காய்கறி சந்தை

சேறும் சகதியுமாக காட்சி தரும் நேதாஜி தினசரி காய்கறி சந்தை

ஈரோடு ஆர்.கே.வி சாலையில் செயல்பட்டு வந்த நேதாஜி தினசரி காய்கறி சந்தை, கொ ரோனா பரவலின் போது, ஈரோடு பேருந்து நிலையத்திற்கு மாற்றப் பட்டு, பின்பு வ. உ.சி பூங்கா எதிரே 1 கோடி ரூபாய் மதிப்பில் தற்காலிக சந்தை கட்டப்பட்டு செயல்பட தொடங்கியது.

சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட கடைகள் உள்ள இந்த சந்தையில், இரவு முழுவதும் மொத்த வியாபாரமும்,காலையில் சில்லரை வியாபாரமும் நடைபெறுவது வழக்கம்.

மற்ற இடங்களைக் காட்டிலும் இங்கு காய்கறிகள் குறைந்த விலையில் விற்கப்படுவ தால் மக்கள் கூட்டம் எப்போதும் அதிகரித்துக் காணப்படும். மேலும் இங்கு வரும் வியாபாரிகள் காய்கறிகளை மொத்த விலைக்கு வாங்கி சென்று சில்லறை வியாபாரம் செய்து வருகின்றனர்.

இதனிடையே இந்த காய்கறி சந்தை மிகவும் சுத்தமாகவும், முறையான பராமரிப்புடனும் இருப்பதாக கூறி கடந்த செப் டம்பர் மாதம் 21ம் தேதி தேசிய தரச்சான்று வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் ஈரோடு மாநகரில் கடந்த சில தினங்களாக மாலை மற்றும் இரவு நேரங்க ளில் பெய்து வரும் மழையின் காரணமாக சந்தை முழுவதும் சேறும் சகதியுமாக காணப்படுகிறது.

இதனால் காய்கறி வாங்க வரும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். அப் போது, சேறும் சகதியுமாக காணப்படும் இந்த சந்தைக்கு வழங்கப்பட்டுள்ள தேசிய தரச்சான்றிதழில், தரத்தை தான் நாங்கள் தேடி வருவதாக, வடிவேல் பட பாணியில் தெரிவித்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், எதிர்வரும் மழை காலங்களை கருத்தில் கொண்டு சந்தையில் உள்ள வழித்தடங்களை காங்கிரீட் தளமாக மாற்றி அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

படிக்க வேண்டும்

spot_img