fbpx
Homeபிற செய்திகள்காவிரி விவகாரம் நாளை இந்து மக்கள் கட்சி போராட்டம்

காவிரி விவகாரம் நாளை இந்து மக்கள் கட்சி போராட்டம்

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவை வலியுறுத்தி அக்.14ல் மாநிலம் தழு விய போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய்துள்ளதாக அக்கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.

நேற்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களிடம் பேசிய அவர், கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கண்டிப்பதற்கு பதிலாக மத்திய அரசைக் கண்டித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது என்றார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் உத்தரவின்படி, கர்நாடகா தண்ணீர் திறக்க வேண்டும்.

தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க கர்நாடகாவை வலியுறுத்தி அக்.14ம் தேதி (நாளை) மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த இந்து மக்கள் கட்சி முடிவு செய் துள்ளது.
இட ஒதுக்கீடு தேவையற்றது. சனாதன தர்மத்தை ஒழிக்கும் வகையில் பேசிய விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மீது உச்ச நீதிமன்றம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எம்ஜிஆர் மற்றும் ஜெயல லிதாவின் கொள்கைகளுக்கு எதிராக, முஸ்லிம் வாக்குகளை கவரும் வகையில் கோவை குண்டுவெடிப்பு வழக்குகளில் ஈடுபட்டவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்று எடப்பாடி கே.பழனிசாமி வலியுறுத்தினார்.

ஆனால், இதுபோன்ற தீவிரவாதிகளை விடுவிப்பதை நாங்கள் எதிர்க்கிறோம். வன்முறையில் நடிகர் விஜய் ரசிகர்கள் ஈடுபடாமல் இருக்க அவர் அஜித் மற்றும் ரஜினிகாந்த் போல் தனது ரசிகர்களுக்கு அவர் அறிவுரை வழங்க வேண்டும். அவரது கட்அவுட்டுகளுக்கு பால் அபிஷேகம் நடத்த தடை விதிக்க வேண்டும், என்றார்.

படிக்க வேண்டும்

spot_img