fbpx
Homeபிற செய்திகள்ஈரோட்டில் தொழில், வர்த்தக கண்காட்சி 29ம் தேதி துவக்கம்

ஈரோட்டில் தொழில், வர்த்தக கண்காட்சி 29ம் தேதி துவக்கம்

ஈரோடு மாவட்ட அனைத்து வணிக மற்றும் தொழில் சங்கங்க ளின் கூட்டமைப்பு (ஃபாட்டியா) 4 நாள் வர்த்தகக் கண்காட்சியை ஈரோடு பரிமளம் மஹாலில் செப்.29-ஆம் தேதி தொடங்குகிறது என அதன் தலைவர் வி.கே.ராஜமாணிக்கம், செயலர் பி.ரவிச்சந்திரன், பொருளாளர் ஆர்.முருகானந்தம், கண்காட்சி தலைவர் என்.டி.மூர்த்தி தெரிவித்தனர்.

மூர்த்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஃபாத்தியாவின் வெள்ளி விழாவையொட்டி 170 ஸ்டால்கள் கொண்ட மெகா கண்காட்சி பிரமாண்டமான முறையில் ஏற்பாடு செய்யப்பட் டுள்ளது.

இதனை ஆட்சியர் ராஜகோபால் சுங்கரா முன்னி லையில் வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி திறந்து வைக்கிறார்.

மத்திய மற்றும் மாநில அரசு நிறுவனங்களான என்எஸ்ஐசி, எம்எஸ்எம்இ, என்எஸ்ஐசி எஸ்சி, எஸ்டி ஹப், மாவட்ட நீதிமன்றம் மற்றும் ஜிஎஸ்டி ஆகியவையும் தங்கள் ஸ்டால்களை வைத்திருக்கும்.

கண்காட்சியானது மத்திய மற்றும் மாநில அரசாங்கத்தின் NSIC, NSIC SC, ST ஹப் மற்றும் MSME ஆகியவற்றின் அங்கீகாரத்தைப் பெற்றது. எனவே, MSME ஸ்டால் களின் வாடகைக்கு 80 சதவீத மானியமும், NSIC SC, ST ஹப் அங்கீகரிக்கப்பட்ட ஸ்டால்களுக்கு 100 சதவீத மானியமும் கிடைக் கும்.

மாவட்டத்தில் முதல் முறையாக மானியம் உறுதி செய்யப்பட்டுள்ளது. FATIA வில் உள்ள நிறுவனங்களின் 74 சங்கங்களின் வேலை வாய்ப்பு மேளாவும் நடைபெறும். மேலும், குழந்தைகளுக்கான போட்டிகள், பல்வேறு கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் 4 நாட்களும் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img