Homeபிற செய்திகள்ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் 1064 மாணவர்களுக்கு பட்டம்

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் 1064 மாணவர்களுக்கு பட்டம்

ஈரோடு கலை அறிவியல் கல்லூரியில் 49 வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. சிறப்பு விருந்தினராக முன்னாள் இந்திய தலைமை நீதிபதி மற்றும் முன்னாள் கேரள ஆளுநர் ப.சதாசிவம் கலந்துகொண்டார். பட்டமளிப்பு விழாவில் 1064 மாணவர்களுக்குப் பட்டங்கள் வழங்கினார்.


இளநிலை மாணவர்கள் 22 பேருக்கும் முதுநிலை மாணவர்கள் 9 பேருக்கும் தங்க பதக்கங்கள்வழங்கி சிறப்புரை ஆற்றினார்.


கல்லூரி தலைவர் வி.ராஜமாணிக்கம், செயலர் மற்றும் தாளாளர் கே.கே.பாலுசாமி, முதல்வர் சங்கரசுப்பிரமணியன், கல்லூரி இயக்குநர் இரா. வெங்கடாசலம், தேர்வு கட்டுப்பாட்டு நெறியாளர் மு. வெங்கடாசலம், டிரஸ்ட் துணைதலைவர் மாணிக்கம்,மற்றும் உறுப்பினர்கள், துறைத் தலைவர்கள், பேராசிரியர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img