கிருஷ்ணகிரி புதிய பஸ் ஸ்டாண்ட் அருகில், அ.தி.மு.க., மாநில மகளிர் அணி துணை செயலாளர் பரிதா நவாப் ஏற்பாட்டில், நேற்று சமத்துவ பொங்கல் விழா நடந்தது. கிழக்கு மாவட்ட செயலாளர் அசோக்குமார் எம்.எல்.ஏ., தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் காத்தவராயன், ஊத்தங்கரை எம்.எல்.ஏ., தமிழ் செல்வம், முன்னாள் எம்.எல்.ஏ., மனோரஞ்சிதம் நாகராஜ், நகர செயலாளர் கேசவன், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் தென்னரசு, அம்மா பேரவை மாவட்ட தலை வர் தங்கமுத்து, அம்மா பேரவை மாவட்ட செயலாளர் மாதையன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சமத்துவ பொங்கல் விழாவில், மாணவியரின் பரத நாட்டிய நிகழ்ச்சி நடந்தது. இதில் பங்கேற்ற அனைவருக்கும் பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, புதுப்பானையில் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கினர். பின்னர், 500 பெண் களுக்கு எம்.எல்.ஏ., அசோக் குமார் நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதில், ஒன்றிய செயலாளர்கள் கண்ணியப்பன், சூர்யா, அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் ஆஜி, கட்சியினர் நவாப், சுஹேல், மகளிர் அணி சுகந்தி மாது, சிறுபான்மை நலப்பிரிவு மாவட்ட செயலாளர் மக்பூல், வர்த்தக பிரிவு மாவட்ட செயலாளர் தூயமணி, முன்னாள் பஞ்சாயத்து தலைவர் பெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.



