fbpx
Homeபிற செய்திகள்தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் சுய தொழில் தொடங்க 1,447 பயனாளிகளுக்கு ரூ.65.19 கோடி தொழிற்கடன்...

தொழில் முனைவோர் மேம்பாட்டு திட்டத்தில் சுய தொழில் தொடங்க 1,447 பயனாளிகளுக்கு ரூ.65.19 கோடி தொழிற்கடன் கடலூர் ஆட்சியர் தகவல்

கடலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சிபி ஆதித்யா செந்தில் குமார் கூறியதாவது:
தமிழ்நாடு முதலமைச்சர் ஆட்சிப்பொ றுப்பேற்றது முதல் பொதுமக்களின் பொருளாதாரம் மேம்படும் வகையில் பல்வேறு துறைகளின் வாயிலாக சீரிய திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். கடலூர் மாவட்டத்தில் தாட்கோ வாயிலாக ஆதிதிராவிட விவசாயிகள் சமுதாயத்தில் பொருளாதார ரீதியாக மேன்மை யடையும் வகையில் நன்னிலம் நில உடைமை திட்டம் முதலமைச்சரால் துவங்கப்பட்டு சந்தை மதிப்பில் 50 சதவீதம் அல்லது அதிகபட்சம் ரூ.5 லட்சம் மானியமாக இத்திட்டத்தில் வழங்கப்படுகிறது.

இத்திட்டத்தில் கிரயம் செய்யும் நிலத்திற்கு 100 சதவீதம் பதிவு கட்டணம்,முத்திரைத்தாள் விலக்கு அளிக்கப்படுகிறது. இத்திட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 22 மகளிர்களுக்கு ரூ.1.08 கோடி மானியத்தில் நஞ்சை மற்றும் புஞ்சை நிலங்கள் 15.5 ஏக்கர் ஆதிதிராவிடர் மகளிர் பெயரில் கிரயம் செய்யப் பட்டுள்ளது.

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இனத்தைச் சார்ந்த 1577 நபர்களுக்கு மானியத்துடன் வங்கிகடன் பெற்று தொழில் துவங்கி பயனடைந்துள்ளனர்.தொழில் முனைவோர் மேம் பாட்டுத் திட்டத்தில் சுய தொழில் தொடங்கறும் 1,447 பயனாளிகளுக்கு ரூ.65.19 கோடி மதிப்பீட்டில் தொழிற்கடன் வழங் கப்பட்டுள்ளது. இதில் ரூ.48.29 கோடி வங்கி கடனாகவும், ரூ.16.91 கோடி மானியமாக வழங்கப்பட் டுள்ளது.
மகளிர் சுய உதவி குழுக் களுக் கான பொருளாதார கடனுதவி திட்டத்தில் 108 குழுக்களில் உள்ள 1,296 உறுப்பினர்களுக்கு ரூ.57.44 கோடி வங்கிக் கடனு தவி வழங்கப்பட்டது. இதில் ரூ.23.72 கோடி தொழில் தொடங்க மானியமாகவும், ரூ.33.72 கோடி வங்கி கடனாவும் வழங்கப் பட்டுள்ளது

மத்திய மற்றும் சிறப்பு நிதியுதவி திட்டத்திற்கான செயல் திட்டத்தில் ஆதிதிராவிடர் மற்றும் பழங் குடியினர் விவசாயிகளுக்கு மானியத்தில் நீர் பாசனத்திற்கான பி.வி.சி. குழாய்கள் வாங்க தலா ரூ.15,000 மானியம் மற் நீர்பாசனத்திற்கு புதிய மின் மோட்டார் வாங்குவ தற்கு தலா ரூ.10,000 மானி யம் வழங்கும் திட்டத்தில் 22 நபர்களுக்கு ரூ.5.7 லட் சம் மானியமாக விடுவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் மாவட்டத்தில் துரித மின் இணைப்பு திட்டத்தின்கீழ் விண்ணப்பத்திருந்த ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் விவசாயி கள் 72 நபர்களுக்கு 90 சத வீகித மானியத்துடன் மின் இணைப்பு வழங்கவேண்டி மின் வாரிய அலுவலகத் திற்கு மானியம் விடுவிக் கப்பட்டுள்ளது. தாட்கோதுறையின்கீழ் செயல்பட்டு வரும் தூய்மை பணியாளர் நல வாரியத்தில் அனைத்து நகராட்சி அலுவலகம், பேரூராட்சி அலுவலகம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலகங்கள்,இணை இயக்குநர் (சுகாதாரப் பணிகள்) மற்றும் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) அலுவலகங்கள் மூலமாக அனைத்து அமைப்பு சாரா தூய்மை பணியாளர்கள் நலவாரியத்தில் தற்காலிக தூய்மை பணியாளர் 1,168 உறுப்பினர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். நலவாரியம் மூலம் 21 நபர்களுக்கு ரூ.1.20 லட்சம் இறப்பு நிதியுதவி, திருமண உதவித்தொகை, கல்வி உதவித்தொகை போன்ற நலத்திட்டங்கள் வழங்கப்பட்டுள்ளது.

வீடற்ற 43 தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு ரூ.4.01 கோடி மதிப்பீட்டில் நகர்புற வாழ் விட மேம்பாட்டுக் குடியிருப்பில் வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் தெரிவித்துள்ளார்.

படிக்க வேண்டும்

spot_img