கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 9-ந்தேதி எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சிதொடக்க விழா காலை 10 மணிக்கு நடக்கிறது
இதுகுறித்து கோவை கொடிசியா தலைவர் கார்த்திகேயன் செயலாளர் யுவராஜ் கண்காட்சி 2024 சேர்மன் பொன்ராஜ் உதவி சேர்மன் கோவர்தன் ஆகியோர் கூறியதாவது:- வருகிற ஒன்பதாம் தேதி தொடங்கும் எலக்ட்ரோ டெக் 2024 கண்காட்சி 12 -ந்தேதி முடிய 4 நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் தமிழ்நாடு, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, குஜராத் ,ராஜஸ்தான், மத்திய பிரதேசம், டெல்லி, ஹரியானா, உத்தரப்பிரதேசம், உத்தரகாண்ட் உள்பட இந்தியா முழுவதும் இருந்து பல்வேறு மாநிலங்கள் பங்கு கொள்கின்றன
இந்த கண்காட்சியில் 200 க்கும் மேற்பட்ட அரங்குகள் இடம் பெறுவது குறிப்பிடதக்கது. 9-ந்தேதி தொடங்கும் தொடக்க விழாவில் சிறப்பு அழைப்பாளர்களாகமொரிசியஸ் குடியரசு நிதி சேவை மற்றும் ஆட்சித் துறை அமைச்சர் சூமில் தத் போலா , மொரிஷியஸ் குடியரசு பொருளாதார மேம்பாட்டு வாரியம் தலைவர் ஹேம்ராஜ் ராம் நியல் சிஷிரி ஆகியோர் கலந்து கொண்டு தொடங்கி வைக்கிறார்கள்.
இந்த கண்காட்சியை பார்வையிட இந்தியா மற்றும் அயல்நாடுகளில் இருந்து 25,000 க்கும் மேற்பட்ட பார்வையாளர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இதன் மூலம் 800 கோடி ரூபாய்க்கு வர்த்தகம் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார்கள்.



