fbpx
Homeபிற செய்திகள்போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு - அமைச்சர்கள் பங்கேற்பு

போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு – அமைச்சர்கள் பங்கேற்பு

கடலூரில், பள்ளி மாணவ-மாணவிகள் முன்னிலையில் போதைப் பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழியை அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் ஏற்றுக் கொண்டனர்.

தமிழ்நாடு துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொலி காட்சி மூலம் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து கடலூர் மாவட்டத் தில் கடலூர் கம்மியம் பேட்டை புனிதவளனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற “போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு” நிகழ்ச்சியில் வேளாண்மை உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம், தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் சி.வெ.கணேசன் ஆகியோர் பள்ளி மாணவ, மாணவிளுடன் போதைப்பொருட்கள் ஒழிப்பு குறித்து விழிப்புணர்வு உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.

தொடர்ந்து, தேசிய குடற்புழு நீக்க தினத்தை முன்னிட்டுபள்ளி மாணவ, மாணவிகளுக்கு குடற்புழு நீக்க மாத்திரைகளை கலெக்டர் சிபி ஆதித்யா செந்தில்குமார், அய்யப்பன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் சுந்தரிராஜா ஆகியோர் முன்னிலை யில் அமைச்சர்கள் வழங்கி, தொடங்கி வைத்தனர்.

குழந்தைகள் மற்றும் பெண்கள் அதிகளவு ரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடுகளால் பாதிப்படைவதை தடுக்கும் நோக்கில் கடலூர் மாவட்டத்தில் அங்கன்வாடி மையம் மற்றும் பள்ளிகளில் பயிலும் குழந்தைகள்,பெண் நபர்களுக்கு குடற்புழு நீக்க என மொத்தம் 9,14,851 நபர்களுக்கு குடற்புழு மாத்திரைகள் (அல்பெண்ட சோல்) வழங்கப்பட்டது.

முன்னதாக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், போதைப் பொருள் இல்லாத தமிழ்நாடு என்பதே முதல் -அமைச்சர் மு.க.ஸ்டாலினின் முக்கிய நோக்கமாகும்.போதைப் பொருட்களை மாணவர்கள் யாரும் பயன்படுத்தக்கூடாது.

உங்களுக்கு தெரிந்து யாராவது போதைப் பொருட்கள் வைத்திருந்தால், தலைமை ஆசிரியர், ஆசிரியர், போலீசாருக்கு தங்கள் பெயரைக்கூட குறிப்பிடாமல் தகவல் தெரிவிக்கலாம் என்றார்.

அமைச்சர் சி.வெ.கணேசன் கூறுகையில், தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் போதைப் பழக்கத்திற்கு எதிராக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

மாணவர்கள் போதைப் பழக்கத்திற்கு ஆளாகாமல் நல்ல முறையில் கல்வி பயின்று எதிர்காலத்தில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., டாக்டர், என்ஜினீயர் போன்ற உயர்ந்த பதவிகளை அடைய வேண்டும்.

போதைப்பழக்கத்திற்கு எதிராக அரசு முன்னெடுக்கும் நடவடிக்கைகளுக்கு மாணவர்கள் துணை நிற்க வேண்டும் என்றார்.

நிகழ்ச்சியில் மாநகராட்சி துணைமேயர் தாமரைச்செல்வன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், மாநகராட்சி ஆணையாளர் மரு.அனு, மாவட்ட சுகாதார அலுவலர் பொற்கொடி, உதவி ஆணையாளர் (கலால்) சண்முகவள்ளி, கோட்டாட்சியர் அபிநயா, கோட்ட கலால் அலுவலர் ஆறுமுகம் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img