தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தலைமை செயலகத்தில் போதை பழக்கத்திற்கு எதிரான விழிப்புணர்வு உறுதிமொழியினை மாணவ, மாணவியர்கள் ஏற்றதையடுத்து, கோவையில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழகத்தில் மாணவ மாணவியர் பங்கேற்ற நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் கிராந்திகுமார் பாடி, காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன், மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன் மற்றும் துணை வேந்தர் கீதா லட்சுமி மாநகராட்சி மேயர் ரங்கநாயகி உட்பட முக்கிய அதிகாரிகள் கலந்து கொண்டனர்