fbpx
Homeபிற செய்திகள்எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது கோவையில் தமிழிசை பேட்டி

எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் தி.மு.க மீண்டும் ஆட்சிக்கு வர முடியாது கோவையில் தமிழிசை பேட்டி

எத்தனை கூட்டங்கள் நடத்தினாலும் திமுக ஆட்சிக்கு வரமுடியாது என்று முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் கூறினார்.
கோவை விமான நிலையத்தில் முன்னாள் ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் செய்தி யாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறி யதாவது:
ஒரு தமிழர் துணை குடியரசு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பது நமக்கெல்லாம் பெருமை. தி.மு.க எத் தனை கூட்டங்கள் போட்டாலும் தி.மு.க ஆட்சிக்கு வர முடியாது. யார் எதிர்த்தாலும் நாம் தான் ஜெயிப்போம் என செந்தில் பாலாஜி சொல் கிறார். பெறுவோம் 200 என்கிறார். நீங்கள் தான் 200 க்கு பேமஸ் ஆச்சே..
பா.ஜ.க அடக்குமுறை செய்கிறது என்ற தேவை யில்லாத குற்றச் சாட்டை சுமத்துகிறார்கள். முப் பெரும் விழாவில் ஒரு பதற்றம் இருக்கிறது. உங் கள் அமைச்சரவையில் உள்ள ஊழலை முதலில் பாருங்கள். செந்தில் பாலாஜி எத்தனை நாள் வெளியே இருக்க போகி றார் என்று பார்ப்போம்.
நாங்கள் 2026ல் பல மாக ஆட்சி அமைப்போம். வாக்கு திருட்டு என காங்கிரஸ் சொல்லுவதே ஒரு ஜோக்..
இவ்வாறு அவர் தெரி வித்தார்.

படிக்க வேண்டும்

spot_img