மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி 102 வது பிறந்தநாள் விழா, திராவிட மாடல் அரசின் நான்காண்டு சாதனைகள் விளக்கப் பொதுக் கூட்டம் மாநகர் மாவட்ட திமுக இளைஞரணி சார்பில் மேற்கு மண்டல திமுக பொறுப்பாளரும் முன்னாள் அமைச்சருமான வி.செந்தில்பாலாஜி வழிகாட்டுதலின் பேரில், கோவை கோட்டைமேடு வின்சென்ட் ரோட்டில் நடைபெற்றது.
மாநகர் மாவட்ட இளை ஞரணி அமைப்பாளர் இரா.தனபால் தலைமை தாங்கினார். மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் கோவை அருண் வரவேற்றுப் பேசி னார். மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கோட்டை அப்பாஸ், கோட் டைமேடு பகுதி திமுக பொறுப் பாளர் வி.ஐ.பதுருதீன், மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர்கள் கே.பி.திரு மலைராஜா, க.மணி கண்டன், துரை பிரவீண், 82 வது வட்டக் கழகச் செயலாளர் ஏ.அப்பாஸ் ஆகியோர் முன்னிலை வகித் தனர். கூட்டத்தில் 1020 ஏழை, எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. மாநகர் மாவட்ட திமுக செய லாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ) கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். பின்னர் ஏழை, எளியவர்களுக்கு நலத் திட்ட உதவிகள் வழங்கினார். இந்த கூட்டத்தில் திமுக மாணவர் அணி செயலாளர் வழக்கறிஞர் ராஜீவ் காந்தி சிறப்புரையாற்றினார். இளம் பேச்சாளர் வழக்கறிஞர் ம.மோக நிதியும் சிறப்புரையாற்றினார். ஏற்பாடுகளை மாநகர் மாவட்ட இளைஞரணி துணை அமைப் பாளர் சி.எம்.எஸ்.மசூது செய் திருந்தார்.

இந்நிகழ்வில், மாநகர் மாவட்ட திமுக துணைச் செயலாளர் கல்பனாசெந்தில், பொருளாளர் எஸ். எம்.பி.முரு கன், தலைமைக் கழக நிர்வா கிகள் தீர்மானக்குழு இணைச் செயலாளர் பி. நாச்சிமுத்து, மு.இரா.செல்வராஜ், தெற்கு சட்டமன்றத் தொகுதி பார்வை யாளர் தகவல் தொழில்நுட்ப அணி துணைச் செயலாளர் மகேந்திரன், தொழிலாளர் அணி துணைச் செயலாளர் தமிழ்ச் செல்வன், மாணவர் அணி துணைச் செயலாளர் வி.ஜி. கோகுல். தலைமைக் கழகப் பேச்சாளர் கோவை சம்பத், பொதுக்குழு உறுப்பினர்கள் மு.மா. ச.முருகன், ச.குப்புசாமி, பகுதி கழகப் பொறுப்பாளர்கள் மார்க்கெட் எம்.மனோகரன், ப.பசுபதி, ஆ.கண்ணன், என்.ஜே.முருகேசன், துரை.செந்தமிழ்ச்செல்வன், சிங்கை மு. சிவா, இலாதேவசீலன், கோவை மாநகராட்சி வரிவிதிப்பு மற்றும் நிதிக்குழு தலைவர் முபசிரா, மாநகர் மாவட்ட மாணவர் அணி அமைப்பாளர் சிவபிரகாஷ், விவசாய தொழி லாளர் அணி தலைவர் சிவராமன், சுலைமான், அயலக அணி தி. கண்ணன், கவுன்சிலர் சுமா விஜயகுமார், வட்டக் கழகச் செயலாளர்கள், பகுதிக் கழக, வட்டக் கழக நிர்வாகிகள், பகுதி இளைஞரணி அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள் இளைஞரணி நிர்வாகிகள், சார்பு அணிகளின் துணைத் தலைவர்கள் துணை அமைப்பாளர்கள், கழக செயல்வீரர்கள் கழகத் தொண்டர்கள், பிஎல்ஏ -2 பாகமுகவர்கள், பூத் கமிட்டி உறுப்பினர்கள், பெருந்திரளான பொதுமக்கள், இளைஞர்கள், மகளிர் அணியினர் கலந்து கொண்டனர். இறுதியில் இளை ஞரணி துணை அமைப்பாளர் லாரா பிரேம் தேவ் நன்றி கூறி னார்.



