தமிழ்நாடு முதலமைச்சர் மக்கள் நலனை மேம்படுத்த பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அரசின் அனைத்து நலத் திட்டங்கள் விரைந்து மக்களுக்கு சென்றடை வதை உறுதி செய்திட உங்களைத் தேடி உங்கள் ஊரில் என்ற சிறப்பு திட்டத்தினை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார். அதன்படி, நேற்று (28ம் தேதி) கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி வருவாய் வட்டத்தில் உள்ள வழுத லம்பட்டு, குள்ளஞ்சாவடி, த.பாளையம், கல்குணம், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி, வடலூர் நகராட்சி, வடக்குத்து, இந்திரா நகர், கீழூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உங்களைத் தேடி உங்கள் ஊரில்’ திட்டத்தில் ‘மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார் களஆய்வு மேற்கொண்டார்.
இதையடுத்து ஆட்சி யர் சிபி ஆதித்யா செந் தில்குமார் கூறுகையில், குறிஞ்சிப்பாடியில் கால் நடை மருத்துவமனை மற்றும் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்யப்பட்டது.
பின்னர் குறிஞ்சிப்பாடி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் வடலூர் நகராட்சி பள்ளிக ளில் வகுப்பறை கட்டுமான பணி, குறிஞ்சிப்பாடி நியாய விலைக் கடைகளில் பொருட்களின் இருப்பு மற்றும் தரம் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
இதைதொடர்ந்து இந்திரா நகர் பகுதியில் உள்ள நுகர் பொருள் வாணிபக் கிடங்கில் உள்ள பொருட்களின் இருப்பு குறித்தும் ஆய்வு செய்து, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை, வருவாய்த்துறை, கால் நடை பராமரிப்புத்துறை, இந்து சமய அறநிலையதுறை உள்ளிட்ட பல துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டங் கள் குறித்து, துறை சார்ந்த அலு வலர்கள் மூலம் கள ஆய்வு மேற் கொள்ளப்பட்டு, அதற்கான தீர்வு குறித்து ஆலோசனை மேற் கொண்டு வளர்ச்சி திட்ட பணிகள் செயல்ப டுத்தப்படும். மேலும் அரசு நலத்திட்டங்கள் தகுதி யான பயனாளிகள் விடு தலின்றி அனை வருக்கும் கிடைத்திட நடவடிக்கை மேற்கொள்ள அலுவலர் களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பின்னர் இத்திட்டத்தில் குறிஞ்சிப்பாடி வட்டாட்சி யர் அலுவலகத்தில் பொது மக்களிட மிருந்து பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்கள் பெறப்பட்டது. தொடர்ந்து, அனைத்து துறை அலுவலர்களுடன் இத்திட்டத்தின் வாயிலாக அந்தந்த துறை சார்ந்த அலு வலர்கள் மேற்கொண்ட கள ஆய்வுகள் குறித்து விரி வான ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. என்றார்.
ஆய்வின்போது, வட்டாட்சியர் விஜய் ஆனந்த், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் வெங்கடேசன், ராமச்சந்திரன், வடலூர் நகராட்சி ஆணையாளர் ரஞ்சிதா, பொறியாளர் சிவசங்கரன், குறிஞ்சிப்பாடி பேரூராட்சி செயல் அலுவலர் பாலமுருகன்,சிதம்பரம் கொள்ளிடம் நீர்வளத்துறை செயற்பொறியாளர் காந்தரூபன், பரவனாறு வடிநில உபகோட்ட உதவி செயற்பொறியாளர் சரவணன் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் உள்பட பலர் உடன் இருந்தனர்.



