ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்படி பாதிக்கப் பட்ட நபரான சேலம் மாவட்டம் பெத்தநாயக் கன்பாளையம் வட்டம் கோயில்புத்தூர் கிரா மத்தைச் சேர்ந்த எல்.சாந் தாமணி என்பவருக்கு தமிழ்நாடு அரசு வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழக்கின் தன்மைக்கேற்றவாறு வழங்கப்பட்டுவரும் தீருதவித்தொகையை வழங்கியுள்ளது.
இதற்கான ரூ.3,50,000-த்தை தமிழ்நாடு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாநில ஆணையத் தலைவர் நீதியரசர்.ச.தமிழ்வாணன் வழங்கினார். துணைத் தலைவர் இமயம் வெ.அண்ணாமலை, உறுப் பினர்கள் செல்வகுமார், ஆனந்தராஜா, பொன் தோஸ், இளஞ்செழியன் ஆகியோர் உடன் இருந்தனர்.
சேலம் மாவட்டம் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர் ஜெயகுமாரும் உடன் உள்ளார்.