fbpx
Homeபிற செய்திகள்கடலூரில் கோடையில் கற்றல் கொண்டாட்ட திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கடலூரில் கோடையில் கற்றல் கொண்டாட்ட திட்டத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

கடலூர் மாவட்டம் கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் நடைபெறும் சிறப்பு பயிற்சி வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


கடலூரில் செய்தியாளர்கள் பயணத்தில் அரசு பள்ளி மாணவர்களின் நலன்கருதி கோடையில் கற்றல் கொண்டாட்டம் திட்டத்தின் கீழ் நடைபெறும் ஆங்கிலம் பேச்சு பயிற்சி, புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கலை பயிற்சி, பிரெஞ்சு மொழி பயிற்சி, அடுமனை பயிற்சி, மண்பாண்ட பொருட்கள் உற்பத்தி பயிற்சி, சதுரங்க விளையாட்டு பயிற்சி, இணையதள வடிவமைப்பு பயிற்சி, கணினி நிரலாக்க அடிப்படை பயிற்சி, நீச்சல் பயிற்சி, குதிரை ஏற்ற பயிற்சி, வில்வித்தை பயிற்சி, கலை மற்றும் ஓவிய பயிற்சி, நீச்சல் ஆகிய சிறப்பு பயிற்சி நடைபெறும் வகுப்புகளை மாவட்ட ஆட்சித்தலைவர் சிபி ஆதித்யா செந்தில்குமார் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.


பின்னர் அவர் கூறியதாவது: தமிழ்நாடு முதலமைச்சர் தலைமை யிலான அரசு மாணவர்கள் கல்வியிலும் விளையாட்டிலும் சிறந்து விளங்கிட வேண்டும் என்பதற்காக பல்வேறு திட் டங்களை ஏற்படுத்தி செயல்படுத்தி வருகிறார்கள்.

அதன் தொடர் நிகழ்வாக பள்ளி மாணவ மாணவிகளுக்கு இறுதி தேர்வு முடிவு பெற்று கோடை விடுமுறை துவங்கியுள்ளதால் அரசு பள்ளியில் பயி லும் மாணவ மாணவிகள் தங்களது விடுமுறை நாட்களை பயனுள்ளதாகவும் தங்களது திறன்களை வளர்த்துக் கொள்ளும் வகையிலும் பொருளாதார வசதி உள்ள மாணவர்களுக்கு கிடைக்கும் வாய்ப்பு அரசு பள்ளிகளின் பயிலும் ஏழை மாணவர்களுக்கும் கிடைத்திட வேண்டும் என்பதற்காகவும் பிற திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என ஆர்வம் உள்ள மாணவர்களுக்கு ஊக்கமூட்டும் வகையிலும் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிறப்பு பயிற்சி வகுப் புகள் நடத் திட ஏற்பாடு செய்யப்பட்டு தற்போது நடைபெற்று வருகிறது.


அதன் அடிப்படையில் ஏப்ரல் 28ம் தேதி முதல் சிறப்பு பயிற்சி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. ஆங்கிலம் பேசும் திறனை வளர்த்திட ஆங்கில பேச்சு பயிற்சி புனித அன்னாள் மேல்நிலைப் பள்ளியிலும், தொழில் மற்றும் ஆராய்ச்சி பயிற்சியாக புகைப்படம் மற்றும் டிஜிட்டல் கலை பயிற்சி சி.கே. கல்லூரியிலும், பிற மொழித்திறனை வளர்க்கும் வகையில் பிரஞ்சு மொழி பயிற்சி திருப்பாதிரிப்புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், சுலபமான இனிப்பு பதார்த்தங்கள் தயார் செய்திடும் வகையில் அடுமனை பயிற்சி வகுப்பு கடலூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளியிலும், சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாமல் பொம்மைகள் செய்து வருவாய் எட்டு வகையில் மண்பாண்டங்கள் தயாரிக்கும் பயிற்சி வகுப்பு திருப்பாதிரிப் புலியூர் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியிலும், மாணவர்களின் விளையாட்டுத் திறனை மேம்படுத்திட பிரெஞ்சு மொழி பயிற்சி மண்பாண்டங்கள் உற்பத்தி செய்யும் பயிற்சி சதுரங்க விளையாட்டு பயிற்சி மஞ்சகுப்பம் அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்திலும், நவீன தேவைக்கான இணையதள வடிவமைப்பிற்கு பயிற்சி வழங்கிடும் வகையில் இணையதள வடிவமைப்பு பயிற்சி சி.கே கல்லூரியிலும், கணினி நிரலாக்கம் மற்றும் கணினி அடிப்படை பயிற்சி வகுப்பு கடலூர் சி.கே பள்ளியிலும், விளையாட்டில் கூடுதல் திறனை வளர்த்து கொள்ள வேண்டும் என்பதற்காக குதிரை ஏற்ற பயிற்சி வகுப்பு ஆரோவில்லிலும், கலை மற்றும் ஓவியப்பயிற்சி வகுப்பு கடலூர் ஏ.ஆர் பெயிண்டிங் ஸ்டுடியோவிலும், வில்வித்தை பயிற்சி வகுப்பு மஞ்சக்குப்பம் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியிலும், நீச்சல் பயிற்சி அறிஞர் அண்ணா விளையாட்டு மைதானத்திலும் நடைபெற்று வருகிறது.

இதுபோன்ற பயிற்சி வகுப்பில் மாணவ மாணவிகள் ஆர்வத்துடன் கலந்து கொள்வது மீண்டும் மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது இது ஒரு சோதனை முயற்சியாக அமைக்கப்பட்டுள்ளது. இனி வரும் காலங் களில் கூடுதல் மாணவர்களை பயிற்சி வகுப்பில் பங்கேற்க செய்திட உரிய நட வடிக்கை மேற்கொள்ளப்படும்.


ஒவ்வொரு பயிற்சிக்கும் தனித்திறன்களை கொண்ட திறமையான ஆசிரியர்கள் மூலம் பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. மாணவர்கள் எளிதில் வந்து செல்ல வேண்டும் என்பதற்காக சிறப்பு போக்குவரத்து வசதியும் செய்து தரப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.


ஆய்வின்போது முதன்மை கல்வி அலுவலர் எல்லப்பன், மாவட்ட விளையாட்டு அலுவலர் தமகேஷ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img