மதம் குறித்து பேசுவதாக தூண்டி விடுவதே முதலமைச்சர் தான் என கோவையில் பேட்டி அளித்த பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குற்றம்சாட்டினார்.
கோவை பீளமேடு பகுதியில் உள்ள பாரதிய ஜனதா கட்சி அலுவலகத்தில் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் தலைமையில் புதிய நிர்வாகிகள் நியமனம் குறித்த மாவட்ட நிர்வாகிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இன்று நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு முன்பாக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு மோசமான நிலையில் இருப்பதாக விமர்சித்தார். மேலும் அவர் கூறியதாவது:
திமுக ஆட்சிக்கு வந்த பிறகு தொடர்ந்து படுகொலைகள் நடக் கிறது. பட்டுக்கோட்டையில் முன்னாள் கட்சி நிர்வாகி தலை துண்டித்து கொலை செய்யப்பட் டுள்ள சம்பவம் வன்மையாக கண்டிக்கத்தக்கது. யார் இதை செய்திருந்தாலும் அவர்கள் மீது காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும். சிவகிரி சம்பவம் அந்த பகுதியில் மிகுந்த பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. பெரும்பாலும், கொங்கு பகுதியில் தோட்டத்தில் வசிப்பவர்கள். திமுக ஆட்சிக்கு வராத காலத்தில் எவ்வித அச்சம் இல்லாமல் இருந்தனர். தற்போது தோட்டத்தை காலி செய்துவிட்டு வெளியூர் செல்கின்றனர்.
அதேபோல், பல்லடத்தில், 7 கொலைகள் கஞ்சா போதையால் நடந்தது. தமிழகத்தில் இளைஞர்கள் போதைக்கு அடிமையாகி உள்ள னர். இதில், காவல்துறையினர் நடவடிக்கைகள் எடுத்ததாக தெரிய வில்லை. கஞ்சா, போதை பொருள் காரணமாகவே கொலை சம்பவங்கள் நடக்கின்றன. இது போன்ற சூழலில் நாம் தமிழ் நாட்டில் இருக்கிறோமா வேறு எங்கேயாவது இருக்கிறோமா என்ற பதற்றமான சூழல் இருக்கிறது. இதில் முதல்வர் நடவடிக்கை எடுப்பார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
நேற்று நடந்த ஆர்ப்பாட்டத்தில் மதப் பிரச்சினைகள் குறித்து நாங்கள் பேசவில்லை. நாங்கள் முதலமைச்சரின் மீது எந்த ஒரு குற்றச்சாட்டையும் முன்வைக்க வில்லை. ஆனால், சிறுபான்மையினர் ஓட்டுக்களை வாங்குவதற்காக நாங்கள் மதம் குறித்து பேசுவதாக தூண்டி விடுவதே முதலமைச்சர் தான். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



