வரும் 2026-27ம் கல்வியாண்டிற்கான அகில இந்திய ரஷ்ய கல்விக்கண்காட்சி, கோயம்புத்தூரில் உள்ள ஹோட்டல் தி கிராண்ட் ரீஜென்ட்டில் மே 15ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறவுள்ளது. ரஷ்ய அரசுக்குச் சொந்தமான ஏழு முன்னணி உயர்கல்வி நிறுவனங்கள் நேரடியாகப் பங்கேற்கும் இக்கண்காட்சியில், இந்திய மாணவர்களுக்காக 10,000 எம்.பி.பி.எஸ் இடங்கள் வழங்கப்படுகின்றன.
இக்கண்காட்சியானது கோயம்புத் தூர் தவிர மதுரையில் மே 12 அன்று ஹோட்டல் ராயல் கோர்ட்டில், மே 13 அன்று, திருச்சியில் ஹோட்டல் ஃபெமி னாவிலும், மே 14 அன்று சேலத்தில் ஜி.ஆர்.டி ஹோட்டல் ஜிபேயிலும் நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் எம்.பி.பி.எஸ் மற்றும் இதர படிப்புகளுக்கான நேரடிச் சேர்க்கை நடைபெறும். அனுமதி இலவசம். இது குறித்த கூடுதல் விவரங்களுக்கு, மாணவர்கள் 9282 221 221 என்ற எண்ணைத் தொடர்பு கொள்ளலாம். இப்படிப்புகளுக்கு ரஷ்ய அரசாங்கம் அதிகளவில் மானியம் வழங்குவதால், இதற்கான கட்டணம் ஆண்டுக்கு மிகக்குறைவாக ரூ.3.5 லட்சம் முதல் தொடங்குகிறது.
இந்நிலையில் இக்கண்காட்சியின் தொடக்கத்தை அறிவிக்கும் வகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், சென்னை ரஷ்யன் ஹவுஸின் துணைத் தூதரும் இயக்குநருமான அலெக் ஸாண்டர் டோடோனவ் மற்றும் ரஷ்யப் பல்கலைக்கழகங்களின் அங்கீகரிக் கப்பட்ட இந்திய பிரதிநிதியும் ஸ்டடி அப்ராட் எஜூகேஷனல் கன்சல்டன்ட்ஸ் நிறுவனத்தின் மேலாண்மை இயக்கு நருமான ரவிச்சந்திரன் ஆகியோர் உரையாற்றினர்.



