fbpx
Homeபிற செய்திகள்பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம் கோலாகலம்

பாஞ்சாலங்குறிச்சியில் மாட்டுவண்டி பந்தயம் கோலாகலம்

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் தாலுகா வில் உள்ள பாஞ்சாலங்குறிச்சியில் சுதந் திரப் போராட்ட வீரர் வீரபாண்டிய கட்ட பொம்மன் பிறந்த நாள் விழா மற்றும் அவரது குல தெய்வம் வீரசக்கதேவி ஆலய 70வது ஆண்டு திருவிழா கடந்த இரண்டு நாட்களாக நடந்தது. இந்த விழாவையொட்டி மாட்டுவண்டி பந்தயம் பாஞ்சாலங்குறிச்சி ஒட்டப்பிடாரம் பசுவந் தனை சாலையில் நடந்தது.

அதில் நடு மாட்டு வண்டி பந்தயம், சின்ன மாட்டு வண்டி எல்கை பந்தயம், மற்றும் குதிரை வண்டி பந்தயம் நடைபெற்றது. இந்த பந்தயத்தில் தூத்துக் குடி தேனி, மதுரை, சிவகங்கை, நெல்லை ஆகிய மாவட்டங்களில் இருந்து காளைகள் கலந்து கொண்டன. இந்த மாட்டுவண்டி பந்தயத்தை மணியாச்சி காவல் துணை கண்காணிப்பாளர் அஜீத் குமார் கொடியசைத்து தொடங்கி வைத்தார். தொடர்ந்து 12 கி.மீட்டர் தூரங்களுக்கு சின்ன மாட்டு வண்டி பந்த யத்தை ஒட்டபிடாரம் காவல் ஆய்வாளர் கார்த்திக் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

நடு மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசை சிவகங்கை மாவட்டம் கோவிலூரை சேர்ந்த மேல மாவேஸ் மாட்டு வண்டியும், இரண்டாவது பரிசை சிவகங்கை மாவட்டம் சிதம்பரம் மாட்டு வண்டியும், மூன்றாவது பரிசை சிங்கிலிப்பட்டி ஆனந்தி மாட்டுவண்டியும், நான்காவது பரிசை மணிக்கலா மாட்டு வண்டியும் பெற்றனர்.
தொடர்ந்து சின்ன மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றது.

மாட்டு வண்டி சாரதிகளுக்கு பரிசுகளை மாவட்ட திமுக திட்ட குழு உறுப்பினர் கே.கே.ஆர். அய்யாத்துரை பாண்டியன், வீரசக்கதேவி ஆலயக்குழு தலைவர் குளத்தூர் மாஜி ஜமீன்தார் ஆர். கண்ணன் ஆகியோர் வழங்கினர்.
இந்நிகழ்ச்சி ஏற்பாடு களை வீரசக்க தேவி ஆலய குழு நிர்வாகிகள் மற்றும் விழா குழு தலைவர் வலசை கண்ணன், செய லாளர் ஆதிசங்கர், பொரு ளாளர் பி.வரதராஜ பெருமாள், வெயில்ராஜ், ஆர். மாப்பிள்ளை சாமி, சுப்பிரமணிய கட்ட பொம்மன், துரை. பொன் னுசாமி, பால்சாமி, மல்லுச்சாமி, முருகேசன், துணை பொருளாளர் செண்பகநாதன் மற்றும் நிர்வாகிகள் செய்து இருந் தனர்.

படிக்க வேண்டும்

spot_img