fbpx
Homeபிற செய்திகள்கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து - ஒருவர் படுகாயம்

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் விழுந்து விபத்து – ஒருவர் படுகாயம்

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் சாலையோரம் இருந்த பிரம்மாண்ட மரம் ஒன்று இன்று வீசிய பலத்த காற்றில் திடீரென வேரோடு சாய்ந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்தது.

இதில் வாகனத்தில் பயணித்தவர் பலத்த காயம்டைந்தார். மேலும், சாலையோரம் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் சேதமடைந்தன.

தொடர்ந்து படுகாயமடைந்தவரை மீட்ட பொதுமக்கள் உடனடியாக அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.எஸ்.புரம் போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினர், ராட்சத ரம்பங்கள் மூலம் மரத்தைத் துண்டு, துண்டாக வெட்டி அகற்றினர். இந்த விபத்து காரணமாக ஆர்.எஸ்.புரம் பகுதியில் சுமார் 3 மணி நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

படிக்க வேண்டும்

spot_img