திண்டுக்கல் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக கூட்டணி கட்சி நாடாளுமன்ற வெற்றி வேட்பாளரான எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர்விஎன் கண்ணன் தலைமையில் இரட்டை இலை சின்னத்தில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
நடைபெறக்கூடிய நாடாளுமன்ற தேர்தலில் திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக கூட்டணி கட்சி வெற்றி வேட்பாளரான எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் முகமது முபாரக் நத்தம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட ஏ. வெள்ளோடு, நரசிங்கபுரம், சிறுநாயக்கன்பட்டி யாகப்பன்பட்டி, இரண்டரை பாறை, நல்லமநாயக்கன்பட்டி உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் மாநில அம்மா பேரவை இணைச் செயலாளர் ஆர் வி என் கண்ணன் தலைமையில் இரட்டை இலை சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.
இந்நிகழ்ச்சியில் கிழக்கு மாவட்ட ஒன்றிய கழகச் செயலாளர் முருகன் கிழக்கு மாவட்ட அம்மா பேரவை செயலாளர் யூசுப் அன்சாரி உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.



