கடலூர் லோக்சபா தொகுதியில், ஓட்டளிக்க உள்ள மூத்த வாக்காளகளுக்கு பொன்னாடை அணிவித்து, கலெக்டர் அருண் தம்புராஜ் கவுரவித்தார். கடலூரில், தேர்தலில் நூறு சதவீத ஓட்டுப்பதிவை வலியுறுத்தி, மாவட்ட நிர்வாகம் சார்பில், மூத்த வாக்காளர்களை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாநகராட்சி கமிஷனர் காந்திராஜ் தலைமை தாங்கினார்.
மகளிர் திட்ட அலுவலர் ஸ்ருதி முன்னிலை வகித்தார். மாவட்ட தேர்தல் அதிகாரி அருண்தம்புராஜ், மூத்த வாக்காளர்களுக்கு பொன்னாடை அணிவித்தார். அப்போது வெற்றிலை,பாக்கு, பழம் ஆகியவற்றுடன் தேர்தல் அழைப்பிதழ் கொடுத்து, ஓட்டளிக்கு வருமாறு அழைப்பு விடுத்தார்.
இதையடுத்து 100 சதவீதம் ஒட்டுப்பதிவின் அவசியம் குறித்து கலெக்டர் முன்னிலையில் உறுதிமொழி எடுக்கப்பட்டது. ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் அலுவலர் பழனி, மாநகராட்சி நகர் நல அலுவலர் எழில் மதனா உட்பட பலர் கலந்து கொண்டனர்.