நவம்பர் மாதத்தில் உலகெங்கும் அனுசரிக்கப்படும் உலக நீரிழிவு தினத்தையொட்டி ‘டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ்’ என்ற பெயரில் நீரிழிவு மற்றும் அதனோடு தொடர்புடைய பிரச்சனைகளுக்கு திறன்மிக்க மேலாண்மைக்கான ஒரு தனித்துவமான முனைப்புத் திட்டத்தை சென்னை, காவேரி மருத்துவமனை ஏற்பாடு செய்து நடத்தியது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், இதையொட்டி நடைபெற்ற கண்காட்சி நிகழ்வில், நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறுவது (“Reversal of Diabetes”) என்ற ஒரு புதிய செயல்திட்டத்தை தொடங்கி வைத்தார்.
இச்செயல் திட்டமானது, ரத்த அழுத்தம், பாதங்கள் மீது ஆய்வு, கண் பரிசோதனை, பற்கள் பரிசோதனை, உயிரி வேதியியல் சோதனைகள், கொழுப்பு பண்பியல்புகள் மற்றும் விழியடி சோதனை ஆகியவற்றின் மீது இலவச பரிசோதனைகளை வழங்குகிறது.
உரிய சிகிச்சையளிக்கப்படாத நீரிழிவு நிலையானது, இதய ரத்தநாள நோய், நரம்பு சேதம், சிறுநீரக சேதம், அல்சைமர் நோய் மற்றும் தீவிர மனச்சோர்வு ஆகிய கடுமையான உடல்நல சிக்கல்களுக்கு இட்டுச் செல்லும்.
நீரிழிவு நிலை ஏற்படும் இடருக்கான காரணிகளுள், அதிக உடற்பருமன் மற்றும் உடலுழைப்பு இல்லாமை மற்றும் சோம்பேறித்தனமான வாழ்க்கை முறை, மரபியல் அம்சங்கள், வயது மற்றும் குடும்பத்தில் இந்நோய் இருந்திருக்கின்ற வரலாறு ஆகியவை உள்ளடங்கும்.
டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ் கண்காட்சி
டிஷ்யூம் டிஷ்யூம் டயாபட்டீஸ் கண்காட்சி வழியாக நோய்களின் இடர்களை அடையாளம் காண்பது மற்றும் திறம்பட அவற்றை சிகிச்சையின் மூலம் நிர்வகிப்பது எங்களது நோக்கமாகும்.
நீரிழிவை சமாளிக்கவும், கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் மக்கள் மேற்கொள்ளும் பயணத்தில் ஆதரவளிப்போம்’ என்று காவேரி மருத்துவமனை முதுநிலை நீரிழிவு சிகிச்சை நிபுணர் டாக்டர் கே. பரணிதரன் கூறினார்.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன் பேசியதாவது: அதிவேகமாக மாறி வரும் உலகில் உடல்நல சிகிச்சைப் பராமரிப்பில் தொழில்நுட்பம் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
நீரிழிவு மேலாண்மையிலும் தொழில்நுட்பத்தின் பங்கு கணிசமாக இருக்கிறது. தொடர்ச்சியான குளுக்கோஸ் அளவு கண்காணிப்பு போன்ற புதிய தொழில்நுட்பம் இப்போது செயல்பாட்டுக்கு வந்திருக்கிறது.
நீரிழிவு நோயாளியின் கையில் ஒரு சிறிய அளவிலான பேட்ச் இணைக்கப்படுகிறது. இது நாள் முழுவதும் நோயாளியின் ரத்த சர்க்கரை அளவுகளை அளவிடுவதற்கு உதவுகிறது. இந்த வழிமுறையினால் நீரிழிவு நோயாளிகளுக்கு துல்லியமான சிகிச்சை வழங்கப்படுவது சாத்தியமாக்கப்பட்டிருக்கிறது.
நீரிழிவு மேலாண்மை மற்றும் நீரிழிவு நோயற்ற வாழ்வை திரும்பப் பெறும் செயல்திட்டம் ஆகியவை மீது சரியான தகவல்களை வழங்கி அறிமுகம் செய்திருக்கிற காவேரி மருத்துவமனையை பாராட்டுகிறேன் என்றார்.



