கோவை கே. பி. ஆர். கலை அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரி, விளையாட்டுத்துறை சார்பில், ‘விளையாட்டு மற்றும் யோகா மன்றம்’ தொடக்க விழா நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் முனைவர் பாலுசாமி மற்றும் ஆலோசகரும் செயலாளருமான முனைவர் ராமச்சந்திரன் ஆகியோர் தலைமை தாங்கினர். மாணவி ரிச்சின் சன்யா வரவேற்றார்.
முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர்
சிறப்பு விருந்தினர் முன்னாள் காவல் துறை தலைமை இயக்குனர் முனைவர் இரவி மன்றத்தை துவங்கி வைத்து பேசும்போது, மாணவர்கள் கல்வியறிவோடு நல்ல உடல் உறுதிப்பாட்டையும் வளர்க்க வேண்டும்.
புதிய செயலிகளின் மூலம் சமூக சீர்கேட்டைக் கண்டறிந்து அதனை தீர்வு காணும் படி வழிவகை செய்ய விழிப்போடு இருக்க வேண்டும். பெண்களுக்கு ஏற்படும் வன்கொடுமைக்கு தீர்வு காண வேண்டும்.
அறிவுக்கூர்மையோடும் தன்னம்பிக்கையோடும் வாழ்வை எதிர்கொள்ள வேண்டும். சமூக வலைதளம் என்பது இருமுனை கொண்ட ஆயுதம் போன்றது. அவற்றிற்கும் போதைப்பொருட்களுக்கும் அடிமையாகிவிடக்கூடாது என்றார்.
மாணவர்கள் கேட்ட கேள்விக்கு விளக்கமளித்தார்.
பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கினார்.
விளையாட்டுத்துறையின் பேராசிரியர்கள் முனியசாமி,முனைவர் தமிழரசி ஆகி யோர் விழாவை ஒருங்கிணைத்தனர்.



