அயர்லாந்தில் உயர் கல்வி கற்கவேண்டும் என்று ஆர்வம் மாணவர்களிடையே அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு, அயர்லாந்து அரசாங்கம் சென்னையில், ‘எஜிகேஷன் இன் அயர்லாந்து’ என்ற கல்விக்கண்காட்சியை நடத்தியது.
உயர்கல்விக்காக மாணவர்களை சர்வதேச அளவில் தேர்வுசெய்யும் முதன்மையான நாடுகளில் அயர்லாந்தும் ஒன்றாகும். இந்தியாவில் இருந்து குறிப்பிடத்தக்க மாணவர்கள் அயர்லாந்தில் உயர்கல்வி பயின்று வருகின்றனர்.
சென்னையில் நடைபெற்ற கண்காட்சி
சென்னையில் நடைபெற்ற கண்காட்சியில் அயர்லாந்தில் இருந்து 16 உயர்கல்வி நிறுவனங்கள் கலந்துகொண்டு சுமார் 450-க்கும் மேற்பட்ட மாண வர்கள் மற்றும் அவர்களது பெற்றோருடன் கலந்துரையாடின.
அயர்லாந்தில் இந்திய மாணவர்களுக்கு கிடைக்கும் உயர்கல்வி பாடத் திட்டங்கள், எவ்வளவு பெயரை சேர்த்துக் கொள் வார்கள் என்ற விவரங்கள், சலுகைகள், வளாக வாழ்க்கை, தங்குமிடம், சர்வதேச மாணவருக்கான ஆதரவு, உதவித்தொகை மற்றும் அந்நாட்டின் கலாச்சாரம் பற்றிய முக்கிய தகவல்களை இந்த கண்காட்சி வழங்கியது.
2023-2024 கல்வியாண்டில் அயர்லாந்தில் படிப்பதற்கு விண்ணப்பிப்பதற்கான வழி முறைகளை மாணவர்கள் புரிந்து கொள்ளவும் விசா நடைமுறைகள் குறித்த தகவல்களை அளிப்பதும் இந்த கண்காட்சியின் ஒரு பகுதியாக அமைந்திருந்தது.
கடந்த கல்வியாண்டில் 5000-க்கும் மேற்பட்ட இந்திய மாணவர்கள் அயர் லாந்தை தங்களுடைய உயர்கல்விக்கான நாடாக தேர்வு செய்தனர்.
கண்காட்சி குறித்து அயர்லாந்தில்கல்விக்கான இந்தியா மற்றும் தெற்காசியாவின் பிராந்திய மேலாளர் பேரி ஓ டிரிஸ் கால் கூறியதாவது: அயர்லாந்தில் உள்ள படிப்புகள், வேலைவாய்ப்புகள், சலுகைகள் உட்பட மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கான அனைத்து கேள்விகளுக்கு அயர்லாந்தின் முன்னணி கல்வி நிறுவனங்களின் பிரதிநிதிகள் நேரடியாக பதிலளிக்க இதுபோன்ற கண்காட்சிகள் அற்புத மான வாய்ப்பை வழங்குகிறது.
கண்காட்சி வாயிலாக மாணவர்கள் தங்களின் எதிர்கால கல்வி குறித்த பயணத்தை தொடங் குதற்கும், வாழ்க்கையில் சிறப்பான வெற்றியைப் பெறவும் உதவுவதே குறிக்கோள்.
அவர்களின் பெரும்பாலான கேள்விகளுக்கு பதில் அளித்து சந்தேகங்களை போக்க முடிந்தது என்று நம்புகிறோம் என்றார். பொறியியல், கணினி, வர்த்தகம், நர்சிங் மற்றும் சமூக அறிவியல் ஆகியவை இந்திய மாணவர்கள் அயர்லாந்தில் படிக்கும் பிரபலமான படிப்புகள் ஆகும்.
சமீப காலமாக இந்திய மாணவர்கள் செயற்கை நுண்ணறிவு, வேளாண் தொழில்நுட்பம், தரவுகளை பகுப்பாய்வு செய்தல், பின் டெக், சைபர் பாதுகாப்பு போன்ற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களில் சேர அதிக ஆர்வம் செலுத்தி வருகிறார்கள்.



