தூத்துக்குடியில் ஆகஸ்ட் 14, 15, 16 ஆகிய மூன்று நாட்களாக நடைபெற்று வந்த ‘நெய்தல் கலைத் திருவிழா’ இனிதே நிறைவு பெற்றது. தமிழர் பண்பாடு, கலை மற்றும் நாகரிகத்தைப் பறைசாற்றும் வகையில், தூத்துக்குடி வ.உ.சி. கல்லூரி மைதானத்தில் கடந்த 14-ஆம் தேதி இந்தத் திருவிழா தொடங்கியது.
விழாவின் முதல் நாளில் சிலம்பாட்டம், தேவராட்டம், பெரிய மேளம், கரகம், சேவை யாட்டம் உள்ளிட்ட பல்வேறு நாட்டுப்புற கலை நிகழ்ச்சிகள் நடை பெற்றன. இரண்டாம் நாளில் கணியான் கூத்து, தப்பாட்டம், கும்மி கோலாட்டம் மற்றும் மெல் லிசை நிகழ்ச்சிகள் மக்களை பெரிதும் கவர்ந்தன.
நிகழ்ச்சியில் கனிமொழி எம்பி பேசுகையில்;
தூத்துக்குடியில் நடை பெற்ற நெய்தல் நிகழ்ச்சிக்கு மக்களின் வரவேற்பு மிகவும் உற்சாகமாக இருந்தது. தமிழ்நாடு மற்றும் பிற மாநிலங்களில் இருந்து வந்த கலைஞர்களின் திறமைக்கு பார்வையாளர்கள் அளித்த கைதட்டல்களும் ஆதரவும் அவர்களுக்குப் பெரிய ஊக்கமாக அமைந்தன.
நிகழ்ச்சிப் பகுதியில் இடம்பெற்ற பாரம்பரிய உணவு வகைகளும், நேரடி உற்பத்திப் பொருட்களும் மக்களின் வரவேற்பைப் பெற்று வியாபாரம் சிறப்பாக நடைபெற்றது. இந்த மூன்று நாள் நிகழ்ச்சியைச் சிறப்பித்த அனைத்து மக்களுக்கும், கலைஞர்களுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள் என்று கனிமொழி எம்பி கூறினார்.
தொடர்ந்து தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக செயலாளர் முன்னாள் அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். விழாவின் ஒரு பகுதியாக, மகளிர் சுய உதவிக்குழுவினரின் உற்பத்திப் பொருட்கள் விற்பனை அரங்கம் மற்றும் பாரம்பரிய உணவு அரங்குகள் அமைக்கப் பட்டிருந்தன. இங்கு மக்கள் கூட்டம் அலைமோதியது.
ஞாயிறு மாலை நடைபெற்ற நிறைவு விழாவில், தமிழ்ப் பண் பாட்டுக் கலைக்குழுவினரின் நாட்டுப்புறக்கலை நிகழ்ச்சிகளுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து தமிழிசை இன்னிசை, உவரி களியல் குழுவின் ஆட்டம், ஜிக்காட்டம், குஜராத் சித்தி கோமா நடனக்குழு, தமிழன்டா கலைக் குழு மற்றும் சூப்பர் சிங்கர் நவீன் நண்பர்கள் இசைக் குழுவின் கலை நிகழ்ச்சிகள் அரங்கேறின.
விழாவின் நிறைவு நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி. தலைமை தாங்கினார்.
முன்னாள் அமைச்சர் கீதாஜீவன், கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் எம்பி, தூத்துக்குடி மேயர் ஜெகன் பெரியசாமி, கோவில்பட்டி எம்.எல்.ஏ. கருணாநிதி, நபார்டு மேலாளர் சுரேஷ் ராமலிங்கம், வ.உ.சி. கல்லூரி முதல்வர் சொ.வீரபாகு, மற்றும் மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், திமுக மாநில மகளிர் அணி வலைதள பொறுப்பாளர் ரத்னா, மாநில மாணவர் அணி செயலாளர் வீரமணி ஜெயக்குமார், மாநில பொறியாளர் அணி துணை செயலாளர் அன்பழகன், துணை மேயர் ஜெனிட்டா, மகளிர் அணி மாவட்ட அமைப்பாளர்கள் விருதுநகர் தெற்கு சுமதி ராமமூர்த்தி, தூத்துக்குடி வடக்கு கவிதா தேவி, ஒன்றிய செயலாளர்கள் சரவண குமார், இளையராஜா, சுரேஷ் காந்தி, பகுதி செயலாளர்கள் ரவீந்திரன், மேகநாதன், சிவகுமார், ஆஸ்கர் மற்றும் மாமன்ற உறுப்பினர்கள், சார்பு அணி அமைப்பாளர்கள், உள்ளிட்ட பல முக்கிய பிரமுகர்கள் மற்றும் திரளான பொதுமக்கள் கலந்துகொண்டு கலை நிகழ்ச்சிகளை ரசித்தனர்.



