தருமபுரி மேற்கு ஒன் றியம் கடகத்தூர் பஞ்சாயத்து மணிப்பூர் கிரா மத்தில் ஸ்ரீ மாரியம்மன் பண்டிகை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பாக கொடி ஏற்று விழா நடைபெற்றது. தருமபுரி மேற்கு மண்டல தலைவர் கணபதி தலைமை தாங்கினார். மாவட்ட துணைத் தலைவர் கடத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் ஐவண்ணன் முன்னிலை வகித்தார்.
மாவட்ட பொதுச் செயலாளர் வெங்கட்ராஜ், மாவட்ட பொருளாளர் காவேரி வர்மன், ஒன்றிய செயலாளர் செல்வம், விவசாய அணி ஒன்றிய தலைவர் சந்தன பாண்டி, ஒன்றிய பொதுச் செயலாளர் அன்பரசன், முரளி, ஒன்றிய பொருளாளர் வெற்றிவேல், ஓபிசி அணி ஒன்றிய தலைவர் சஞ்சீவன், ஊரக மற்றும் உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு ஒன்றிய தலைவர் சக்திவேல், கிளை தலைவர் சிவக்குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகன், இலக்கிய மேம்பாட்டு பிரிவு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ், கிளைத் தலைவர் முரளி மற்றும் பொதுமக்கள் பங்கேற் றனர்.



