fbpx
Homeபிற செய்திகள்கோவையில் 12 வயது சிறுமி மாயம் -இரண்டு தனி படைகள் அமைத்து போலீசார் விசாரணை

கோவையில் 12 வயது சிறுமி மாயம் -இரண்டு தனி படைகள் அமைத்து போலீசார் விசாரணை

12 வயது பெண் குழந்தை மாயம்: இரண்டு தனி படைகள் அமைத்து சி.சி.டி.வி காட்சிகளை கொண்டு காவல்துறை தேடி வருகின்றது.
கோவை ஒண்டிப்புதூரைச் சேர்ந்த  சுதாகரன் என்பவரது 12 வயது சிறுமி மகள் ஸ்ரீநிதி. 7ம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில், நேற்று இவர் வீட்டு அருகே விளையாடு கொண்டு இருந்தார். அப்பொழுது திடீரென மாயமானார். இது குறித்து சுதாகரன் சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். 


புகாரின் பேரில் காவல் துறையினர் இரண்டு தனி படைகள் அமைத்து தேடி வந்தனர். இந்நிலையில் அங்கு இருந்த சி.சி.டி.வி காட்சிகளை ஆய்வு செய்த போது அவர்  ஒண்டிப்புதூர் பேருந்து நிறுத்தத்தில் இருந்து உக்கடம் செல்லும் பேருந்து ஏறிய காட்சிகள் பதிவாகி இருந்தது. அதைத் தொடர்ந்து அந்த பேருந்து சென்ற பாதையில் இருக்கும் பேருந்து நிறுத்தங்களில் ஆய்வு செய்த போது அவர் எங்கு இறங்கினார் என்பது தெரியவில்லை. 

மேலும் அவருக்கு சக்கரை நோய் இருப்பதாகவும் அதற்கு (மருந்து) ஊசி எடுத்துக் கொண்டு உள்ளதாகவும் பெற்றோர் தெரிவித்து உள்ளனர். மேலும் அந்த குழந்தையின் புகைப்படத்தை அனைத்து காவல் நிலையங்களுக்கும் அனுப்பி மாநகர் மற்றும் புறநகர் பகுதியில் காவல்துறையினர் தீவிர தேடுதல் நடத்தி வருகின்றனர்.

படிக்க வேண்டும்

spot_img