fbpx
Homeபிற செய்திகள்தர்மபுரி உலக புத்தக தின விழா கொண்டாட்டம்

தர்மபுரி உலக புத்தக தின விழா கொண்டாட்டம்

தர்மபுரி மாவட்ட மைய நூலகம், வாசகர் வட்டம், தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் மற்றும் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் இணைந்து நடத்தும் உலக புத்தக தினவிழா தர்மபுரியில் உள்ள மாவட்ட மைய நூலகத்தில் நடைபெற்றது.

விழாவிற்கு தலைமை ஆசிரியரும், தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் மாவட்ட தலைவருமான பழனி தலைமை தாங்கினார். முதல் நிலை நூலகர் ஆர்.மாதேஸ்வரன் வரவேற்று பேசி னார். இருப்பு சரிபார்ப்பு அலுவலர் கோ.மாதேஸ்வரன் முன்னிலை வகித்தார்.

வாசிப்பு பழக்கம்

விழாவில் உலகப் புத்தகத்தை விழாவையொட்டி நடைபெற்ற புத்தகக் கண்காட்சியை தகடூர் புத்தகப் பேரவையின் தலைவர் இரா.சிசுபாலன் திறந்து வைத்து வாசிப்பு பழக்கம் வாழ்வின் வளர்ச்சிக்கு இன்றியமையாதது என்ற கருப்பொருளுடன் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் செயலாளர் துரைராஜ், பட்டதாரி ஆசிரியர் முனிராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டு பேசினர். முடிவில் மூன்றாம் நிலை நூலகர் முத்துசாமி நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img