fbpx
Homeபிற செய்திகள்மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற ‘தமிழ் இலக்கியத்...

மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் மாணவர்கள் ஆர்வத்துடன் பங்கேற்ற ‘தமிழ் இலக்கியத் திறனறிவு தேர்வு’

மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில், 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான “தமிழ் இலக்கியத் திறனறிவுத் தேர்வு” பயிற்சி வகுப்புகள் துவக்க விழா , தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்திய தொகுதி 4 தேர்வுகள் மற்றும் அரசு தேர்வுகள் இயக்ககம் நடத்திய தேர்வுகளுக்கு பயிற்சி அளித்த ஆசிரியர்களுக்கும் ஒத்துழைப்பு நல்கிய நகராட்சி அலுவலர்களுக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில் அவர்களுக்கு பாராட்டு விழாவும் மேட்டுப்பாளையம் நகராட்சி நூலகம் மற்றும் அறிவு சார் மையத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வுகளுக்கு மேட்டுப் பாளையம் நகராட்சி ஆணையாளர் இரா.அமுதா தலைமையேற்று பரிசுகளை வழங்கினார். நகர் மன்றத் துணைத் தலைவர் அருள்வடிவு வாழ்த்துரை வழங்கினார்.. நகராட்சி அலுவலர் பெ.ஜெயராமன் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

இந்த நிகழ்வில் பயிற்சி ஒருங்கிணைப்பாளர்கள் அ.ராஜா மணி, குப்புராஜ், பயிற்சி அளித்த 11 ஆசிரியர்கள்,30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கேற்க விழா சிறப்பாக நடை பெற்றது.

நூலகர் பவித்ரா, உதவியாளர் மாரிமுத்து ஆகியோர் விழா ஏற்பாடுகளை செய்திருந்தனர். உதய குமார் நன்றி கூறினார்.

படிக்க வேண்டும்

spot_img