கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கோவை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சித்திட்டப் பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடனான ஆய்வு கூட்டம் கோவை மாவட்டத்திற்கான கண்காணிப்பு அலுவலர்/ தமிழ்நாடு தொழில் வளர்ச்சி நிறுவனத்தின் மேலாண் இயக்குநர் ஜெயஸ்ரீ முரளிதரன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடி, மாவட்ட வருவாய் அலுவலர் ஷர்மிளா, பொள்ளாச்சி சார் ஆட்சியர் பிரியங்கா, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குநர் மலர்விழி ஆகியோர் உள்ளனர்.