தூத்துக்குடி முத்தையாபுரம் கீதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி 35வது ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப், வரவேற்புரையாற்றினார். தலைமை ஆசிரியர் சித்ரா ஆண்டறிக்கையை வாசித்தார்.
சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட கூடுதல் கலெக்டர் புவனேஸ்ராம் கடந்த ஆண்டு 10, 12ம் வகுப்பு தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களுக்கும், 100 சதவீத தேர்ச்சி பெற்ற அனை வருக்கும் பரிசுகளை வழங்கினார்.
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன், ஆசிரியர்கள் உள்பட பலருக்கு பரிசுகள் வழங்கி பேசிய தாவது:
கல்வி என்ற செல்வத்தை யாராலும் திருட முடியாது காலத் திற்கு ஏற்றாற் போல் நீங்களும் உங்களை மாற்றிக்கொண்டு படிக்க வேண்டும். தாய் தந்தையர்கள் அறி வுரையின் படி ஆசிரியர்களின் வழிகாட்டுதல்கள் உங்களுக்கு அவசியமாகிறது. ஓவ்வொருவரின் படிப்பும் ஏழு தலைமுறைக்கு உதவிடும் என்று கூறுவதுண்டு.
அதை நல்லமுறையில் நீங்களும் அறிந்து ஒழுக்கமானவர்களாக வளர வேண்டும். நம்முடைய நாடும் வளரவேண்டும். உலகத் திற்கு எடுத்துக்காட்டும் வகை யில் உங்களது படிப்பின் மூலம் திறமைகளை வளர்த்துக் கொண் டால் வாழ்க்கையில் எல்லாம் சாதிக்கலாம். விழாவில் பங்கு எடுத்துக்கொண்ட பெற்றோர்கள் மாணவ மாணவிகள் எல் லோருக் கும் என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இவ்வாறு அவர் பேசினார்.
விழாவில் உறுப்பினர்கள் சுதன்கீலர் சுதாசுதன், டாக்டர் கீர்த்தனா மகிழ்ஜான், ஜீனாஜீவன், உதவி தலைமை ஆசிரியை மகா லட்சுமி ஆசிரியர்கள், பெற்றோர் கள் மாணவ மாணவிகள் உள்பட பலர் கலந்து கொண்டானர் டாக் டர் மகிழ்ஜான் நன்றி கூறினார்.



