Homeபிற செய்திகள்கோவையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கல்வி நிறுவனங்கள் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க மாநகராட்சி கமிஷனர்...

கோவையில் டெங்கு காய்ச்சல் தடுப்பு நடவடிக்கை: கல்வி நிறுவனங்கள் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க மாநகராட்சி கமிஷனர் அறிவுறுத்தல்

கோவை மாநகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் செயல்பட்டு வரும் தங்கும் விடுதி காப்பா ளர்களுக்கான டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வு பயிற்சி முகாம் நேற்று ஆர்.எஸ்.புரம் கலையரங்கில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் கட்டா ரவி தேஜா பேசியதாவது:

விடுதி காப்பாளர்கள் கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் வகையில் விடுதிகளில் உள்ள மேல்நிலைத்தொட்டிகள் மற்றும் கீழ்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளை முறையாக பராமரிக்க வேண்டும். விடுதிகளில் உள்ள உணவருந்தும் கூடங்கள், தோட்டம், பால்கனி, வாகன நிறுத்துமிடம், காத்திருப்பு பகுதி, சமையலறை நீர்த்தேக்கம், குளிர்சாதன பெட்டிகள் உள்ளிட்டவற்றில் நன்னீர் தேங்காத வகையில் பார்த்துக்கொள்ள வேண்டும். சாக்லேட் பேப்பர், பிஸ்கட் பாக்கெட் பேப்பர், டீ கப்புகள், பார்சல் உணவு டப்பாக்கள் ஆகியவற்றை முறையாக அப்புறப்படுத்தாமல் அப் படியே போட்டு விடுவதால் நன்னீர் தேங்க வாய்ப்பு உள்ளது.

விடுதி காப்பாளர்கள் இவற்றை கண்காணித்து முறையாக அப்புறப்படுத்த வேண்டும். முட்புதர்கள், செடிகள் ஆகியவற்றை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். காய்ச்சல் கண்காணிப்பு மற்றும் டெங்கு தடுப்பு நடவடிக்கைகளுக்கு ஒவ்வொரு கல்வி நிறுவனமும் பொறுப்பு அலுவலர்களை நியமிக்க வேண்டும். அவர்கள் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாநகராட்சியின் வாராந்திர லார்வா எதிர்ப்பு சுய ஆய்வு சரி பார்ப்பு பட்டியலை நிரப்ப வேண்டும்.
அன்றைய தினமே மாணவ, மாணவிகளுக்கு டெங்கு தடுப்பு விழிப்புணர்வு நடவடிக்கைகள் ஒவ்வொரு வாரமும் நடத்தவேண்டும். இதில் சிறப்பாக செயல்படும் கல்வி நிறுவனத்திற்கு சுழற்கேடயம் வழங்கப்படும். இதற்காக பிரத்யேக வாட்ஸ் அப் குழு உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

இதில் கோவை மாநக ராட்சிக்கு உட்பட்ட பள்ளிகள் மற்றும் கல்லூரிகளின் விடுதி காப்பாளர்கள் 150க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர். டாக்டர் விஜயகுமார் டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் குறித்து எடுத்துரைத்தார். மாநகர் நல அலுவலர் டாக்டர் சுபாஷ் காந்தி டெங்கு மற்றும் உண்ணி காய்ச்சல் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டு நெறிமுறைகளை விளக்கி பேசினார்.

படிக்க வேண்டும்

spot_img