Homeபிற செய்திகள்கல்லூரி மாணவர் பேரவை பதவியேற்பு விழா

கல்லூரி மாணவர் பேரவை பதவியேற்பு விழா

ஈரோடு திண்டலில் உள்ள விஇடி (VET) இன்ஸ்டிடியூட் ஆஃப் ஆர்ட்ஸ் அண்ட் சயின்ஸ் கல்லூரியின் மாணவர் பேரவை சார்பில் ‘பதவியேற்பு விழா 2026’ நடைபெற்றது.

விழாவுக்கு வேளாளர் கல்வி அறக்கட்டளையின் செயலர் எஸ்.டி.சந்திரசேகர் தலைமை வகித்தார். அறக்கட்டளை உறுப்பினர் சி.பாலசுப்ரமணியன் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி முதல்வர் டாக்டர் வி.பி. நல்லசாமி வரவேற்புரையாற்றினார். நிர்வாகம் மற்றும் மாணவர் நலன் துறை டீன் டாக்டர் எஸ். லோகேஷ் குமார் வாழ்த்துரை வழங்கினார்.

ஈரோடு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி.வி. கிரண் ஸ்ருதி ஐபிஎஸ் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர் பேரவை நிர்வாகிகளுக்கு பதக்கங் களை அணிவித்து பதவியேற்பை நடத்தி வைத்து உரையாற்றினார்.
ஈரோடு நகர துணைக் காவல் கண்காணிப்பாளர் முத்துக்குமார், இளை ஞர்களிடையே போதைப் பொருள் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் மற்றும் பாதிப்புகள் குறித்து விழிப்புணர்வு உரையாற் றினார்.

படிக்க வேண்டும்

spot_img