கோவை மாவட்டம் பட்டியல் மற்றும்பழங்குடியினர் நல குழு வன்கொடுமை விழிப்புணர்வு குழு மற்றும் வன்கொடுமை தடுப்பு சட்ட குழு உறுப்பினர்கள் ஒருங்கிணைப்பு அமைப்பு கூட்டம் கோவை ரயில் நிலையம் முன்பு திவ்யோதயா ஹாலில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு டாக்டர் ராஜ சுகுண சேகர் தலைமை தாங்கினார். இதில் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில எஸ்.சி/.எஸ்.டி. ஆணையத்தின் உறுப்பினர் எஸ்.செல்வகுமார் கலந்துகொண்டு வழிகாட்டுதல் விளக்க உரையை நிகழ்த்தினார்.
மேலும் கூட்டத்தில் 26.6.2025 ஆம் தேதி மாநில எஸ்சி எஸ்டி ஆணைத்தின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோவை வருகை தரும்போது சிறப்பான வரவேற்பு நிகழ்ச்சி நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.
கோவை செம்மொழிப் பூங்கா நூலகம் திறப்பு விழாவில் பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் சிலைகள் மற்றும் சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் திருஉருவ சிலை திறந்து கோவைக்கு சிறப்பு சேர்க்க வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
நிகழ்ச்சியில் நல குழு உறுப்பினர்கள் மனோகரன், பூவேந்தன், ரமேஷ், தினேஷ் குமார் ,சாத்துக்குட்டி ,சுந்தர்ராஜ், சக்திவேல், மணிமாறன் மற்றும் கோட்ட குழு உறுப்பினர்கள் கணேஷ்குமார், செல்வராஜ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.



