கோவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ‘மக்களுடன் முதல்வர்’ திட்டத்தை துவக்கி வைத் தார். இதைத் தொடர்ந்து பேரூராட்சி. நகராட்சி, மாநக ராட்சி பகுதிகளில் மக்களுடன் முதல்வர் முகாமை நடத்த தமிழ்நாடு அரசு உத்தர விட்டது.
அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் நகராட்சியில் நான்காம் கட்டமாக நேற்று ஊட்டி சாலையில் உள்ள சிஎஸ்ஐசர்ச் வளாகத்தில், ‘மக்களுடன் முதல்வர்’ முகாம் நகராட்சி தலைவர் மெஹரீபா பர்வீன் அஷ்ரப் அலி, துணைத்தலைவர் அருள்வடிவு முனுசாமி தலைமையில் நடைபெற் றது.
நகராட்சி பொறியாளர் சுகந்தி, சமூக பாதுகாப்பு திட்ட தனி தாசில்தார் ரங்கராஜ் முன்னிலையில் நடைபெற்ற முகாமில் வருவாய், காவல், உள் ளாட்சி உள்ளிட்ட 13 அரசு துறைகளை சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மேட்டுப்பாளையம் நகராட்சிக்கு உட்பட்ட 1,2,3,4,5,10,13,17,18 உள் ளிட்ட வார்டுகளில் வசிக்கும் மக்கள் தங்க ளது கோரிக்கைகளை மனுக்களாக உரிய ஆவணங் களுடன் அதிகாரிகளிடம் அளித்தனர்.
நேற்று காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை நடைபெற்ற முகாமில் பொதுமக்களிடம் இருந்து மொத்தமாக 676 மனுக்கள் பெறப்பட்டன. மக்களின் கோரிக்கை மனுக்கள் மீது 30 நாளுக்குள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்பதால் முகாமில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



