கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் 36-வது தேசிய சாலை பாதுகாப்பு விழா நடைபெற்றது. இதில் சிதம்பரம் பேருந்து நிலையத்தில் வட்டாரப் போக்குவரத்து அலுவ லர் அருணாச்சலம் தலைமையிலான அதிகாரிகள் பொதுமக்கள் மற்றும் பயணிகளிடம் சாலை பாதுகாப்பு குறித்து துண்டு பிரச்சாரம் வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
அதனைத் தொடர்ந்து சிதம்பரம் பேருந்து நிலையத்தில் அரசு மற்றும் தனியார் பஸ்களில் அதிக ஒலி எழுப்பும் அரசு மற்றும் தனியார் பேருந்து ஏர் ஹாரன் உள்ளதை ஆய்வு மேற்கொண்டார்.
இதில் மொத்தம் 20 அரசு மற்றும் தனியார் பஸ்களில் நடத்திய சோதனையின் போது, 7 பஸ்களில் விதிமுறைகளை மீறி அதிக ஒலி எழுப்பும் ஏர்ஹாரன்கள் பொருத்தப்பட்டிருந்தது தெரியவந்தது.
அந்த பஸ்களில் இருந்து 7ஏர் ஹாரன்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலர் அருணாச்சலம் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்.