fbpx
Homeபிற செய்திகள்தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை திட்டப் பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு

தோட்டக்கலை, மலைப் பயிர்கள் துறை திட்டப் பணிகளை கடலூர் கலெக்டர் ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டாரத்தில் தோட்டக்கலை மற்றும் மலை பயிர்களின் துறை மூலமாக செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.

பண்ருட்டி தட்டாஞ்சாவடி, கீழக்குப்பம் முந்திரி பதப்படுத்தும் மையத்தையும், பண்ருட்டி ஒழுங்கு முறை விற்பனைக்கூடத்தில் உள்ள குளிர்பதன கிடங்கினையும், கீழ்மாம்பட்டு பகுதிகளில் மொட்டு காளான் உற்பத்தி மற்றும் பலா புதிய ரகங்கள் நடவு செய்தல் ஆகியவற்றையும் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

முந்திரி பதப்படுத்தும் நிலையங்களில் முந்திரி விளைபொருளில் இருந்து முந்திரி பருப்புகள் பதப்ப-டுத்தும் வழி முறையை ஒவ்வொரு படிநிலையாக வும் முந்திரி விளை பொருள் இறக்குமதி மற்றும் பதப்படுத்தப்பட்ட முந்திரி ஏற்றுமதி செய்யும் வழிமுறைகள் குறித்து கேட்டறிந்து, முதன்மை பதப்படுத்தும் நிலையத்தின் பதப்படுத்தும் அளவினை மேலும் அதிகரிக்க அறிவுரை வழங்கினார்.

தொடர்ந்து பண்ருட்டி ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள 1000 மெ.டன் கொள்ள ளவு கொண்ட குளிர்ப தன கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டுள்ள பழங்கள் மற்றும் வேளாண் விளைபொருள் கொள்முதல் மற்றும் இருப்பு விவரங்களை ஆய்வு செய்து, குளிர் பதன கிட்டங்கி வாடகைதாரர்கள் வைத்த கோரிக் கையின் அடிப்படையில் குளிர்பதன கிட்டங்கியில் Rack மற்றும் Fork Lift அமைப்பதற்க்கு உரிய நடவடிக்கை எடுக்க துறை அலுவலர்களுக்கு அறிவு றுத்தினார்.

தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலம் பண்ருட்டி வட்டாரத்தில், கீழ்மாம்பட்டு கிரா மத்தில், தேசிய தோட்ட கலை இயக்க திட்டத்தின் கீழ் பலா புதிய ரகங்கள் நடவு செய்தல் என்ற இனத் தின் கீழ் சித்து,
சங்கரா மற்றும் ஜே33 ஆகிய புதிய ரகங்கள் நடவு செய்யப்பட்ட தோட்டங்களை பார்வையிட்டு விவசாயிகளில் இத்திட்டத்தின் மூலம் ஏற்படும் பயன்கள் குறித்தும், மேலும், அதே பகுதியில் 40 சதவீத மானியத்தில் நிறுவப்பட்ட மொட்டு காளான் உற் பத்தி செய்யும் கூடத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் போது வேளாண் வணிகத்துறை துணை இயக்குநர் பூங் கோதை, தோட்டக்கலை துணை இயக்குநர் அருண், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) கதிரேசன் மற்றும் பண்ருட்டி வட்டார தோட்டக்கலை அலுவலர்கள் உள்பட துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img