fbpx
Homeபிற செய்திகள்துபாய் சர்வதேச யோகா போட்டி: கோவை வங்கி மேலாளர் தேர்வு

துபாய் சர்வதேச யோகா போட்டி: கோவை வங்கி மேலாளர் தேர்வு

கோவை பிராண யோகா மையம் மற்றும் யோகா கலாச்சார சங்கம் சரவணம்பட்டியில், தமிழ்நாடு மாநில யோகா சாம்பியன்ஷிப் போட்டியை நடத்தியது.

இந்த போட்டியின் நோக்கம், வரும் மே மாதம் துபாயில் நடைபெற உள்ள சர்வதேச யோகா போட்டிக்கான விண்ணப்பதாரர்களைத் தேர்ந்தெடுப்பதே ஆகும். சர்வதேசப் போட்டிக்கான தகுதிச் சுற்றுப் போட்டியில் 3 வயது முதல் 60 வயது வரையிலான பல்வேறு பிரிவுகளில் 100-க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்துகொண்டனர்.

சர்வதேசப் போட்டி

கோவையில் தனியார் வங்கியில் கிளை மேலாளராகப் பணிபுரியும் ஏ.எஸ்.சாய் வீர சேகர், 30 முதல் 40 வயது வரையிலான பிரிவில் இருந்து சர்வதேசப் போட்டிக்கு தகுதி பெற்றார்.

சாய் வீரசேகர், கடந்த 8 ஆண்டுகளாக யோகா பயிற்சி செய்து, மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்றுள்ளார். சிறந்த நாடு, சிறந்த உலகத்தை உருவாக்க இளைஞர் கள் அதிகளவில் யோகா பயிற்சியில் ஈடுபட வேண்டும்.

தனது தந்தையும், மாமாவும் யோகா பயிற்சிக்கு உறுதுணையாக இருந்தனர் என சாய் வீரசேகர் தெரிவித்துள்ளார் ஓசோன் யோகாவைச் சேர்ந்த மீ பாலகிருஷ்ணன், சாயைப் பாராட்டி பரிசு பெற வாழ்த்தினார்.

படிக்க வேண்டும்

spot_img