fbpx
Homeபிற செய்திகள்கோவை பள்ளிக்கு 3 வாஷ் பேசின்கள் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழங்கியது

கோவை பள்ளிக்கு 3 வாஷ் பேசின்கள் யூனியன் பேங்க் ஆப் இந்தியா வழங்கியது

யூனியன் பேங்க் ஆப் இந்தியா நிர்வாக இயக்குனரும் முதன்மை நிர்வாக அலுவலருமான ஏ.மணிமேகலை, ‘எம்பவர் ஹெர்’ என்ற திட்டத்தை அறிமுகபடுத்தி உள்ளார்.

இது, சமூகப் பொறுப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் அனைவருக்கும் அடிப்படை வசதிகள் மற்றும் தூய்மையான சூழலை வழங்க அறிவுறுத்துகிறது.

அந்த திட்டத்தின் இலக்கை நிறைவேற்றும் ஒரு பகுதியாக, யூனியன் பாங்க் ஆப் இந்தியா, கோவை மண்டல அலுவலகம் சார்பில் கோவை கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு மாணவர்களின் சுகாதாரத்தைப் பேணும் வகையில் மூன்று வால் மவுண்டட் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் ஹேண்ட் வாஷ் பேஷின்கள் (கை கழுவும் தொட்டிகள்) 23.1.2023 அன்று வழங்கப்பட்டது.

இதையொட்டி, பள்ளியில் நடந்த நிகழ்வைத் தொடர்ந்து, அந்த வாஷின் பேசின்களை மாணவ, மாணவிகள் பயன்படுத்தி மகிழ்ந்தனர்.

யூனியன் பாங்க் ஆப் இந்தியாவின் இந்த நடவடிக்கை, கேந்திரிய வித்யாலயா பள்ளி மாணவ, மாணவிகளுக்கு சுகாதாரமான சூழ்நிலையை உருவாக்கித் தந்துள்ளது குறிப்பிடத்தக்கது. நிகழ்ச்சியில் வங்கி அதிகாரிகள், பள்ளி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

படிக்க வேண்டும்

spot_img