கோவை மாநகராட்சி மத்திய மண்டலம், ரத்தினபுரி சுந்தரம் வீதியில் உள்ள லாலா மஹாலில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை மாவட்ட ஆட்சித்தலைவர் பவன்குமார் க.கிரியப்பனவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இம்முகாமில் மாநகராட்சி ஆணையாளர் சிவகுரு பிரபாகரன், மாநகர் மாவட்ட திமுக செயலாளர் நா.கார்த்திக் (முன்னாள் எம்எல்ஏ), மண்டலக்குழுத் தலைவர் (மத்தியம்) மீனாலோகு மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
இம்முகாமில் 7 பயனாளிகளின் மனுக் களுக்கு உடனடியாக தீர்வு காணப்பட்டு, ஒருவருக்கு பிறப்பு சான்றிதழையும், 3 பேருக்கு குடும்ப அட்டையில் பெயர் மாற்றம் செய்யப்பட்டதற்கான ஆணைகளையும், 3 பயனாளிகளுக்கு முதலமைச்சரின் மருத்துவக் காப்பீடு அட்டைகளையும் மாவட்ட ஆட்சித் தலைவர் பவன்குமார் வழங்கினார்.
கோவை மாவட்டத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் இரண்டாம் கட்டமாக மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றியம் ஆகிய பகுதிகளில் 19.08.2025 முதல் 12.09.2025 வரை 96 முகாம்கள் நடைபெறவுள்ளன.
உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் தங்களது பகுதிகளில் நடைபெறும் முகாம்களில் பொதுமக்கள் அனைவரும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கேட்டுக்கொண்டுள்ளார்.



