fbpx
Homeபிற செய்திகள்அரிதான தோல் புற்றுக்கட்டிக்கு வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை

அரிதான தோல் புற்றுக்கட்டிக்கு வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனை

அரிதான தோல் புற்றுக்கட்டிக்கு வெற்றிகர சிகிச்சை அளித்த சிம்ஸ் மருத்துவமனைதகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றிய ஒரு இளம் நிபுணரை பாதித்திருந்த ‘டெர்மடோஃபைப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ்’ (DFSP) என்ற அரிதான மற்றும் தீவிரமான தோல் புற்றுநோய்க்கு சென்னை சிம்ஸ் மருத்துவமனையின் பலதுறைகளை உள்ளடக்கிய மருத்துவர்கள் வெற்றிகரமாக சிகிச்சையளித்துள்ளனர்.

இந்த வகை புற்றுநோய், தசை மற்றும் எலும்பு உட்பட சுற்றியுள்ள திசுக்களுக்கு வேகமாகப் பரவக்கூடியது. இந்நோயாளிக்கு ஏற்பட்டிருந்த, புற்றுநோய் அவரது உச்சந்தலை மற்றும் மண்டையோட்டை கடுமையாகப் பாதித்து மோசமான நிலைமையை எட்டியிருந்தது. தற்போது வழங்கப்பட்டிருக்கும் சிகிச்சையின் மூலம், ஆரோக்கியமான மற்றும் நிலையான திசுக்களால் முழுமையாக மூடப்பட்டுள்ளது.

நோய் மீண்டும் வருவதை முன்கூட்டியே கண்டறிய, தொடர் மருத்துவப் பரிசோதனைகள், சூரிய ஒளியிலிருந்து பாதுகாப்பு மற்றும் உச்சந்தலைக்கு சிறப்பான சுகாதார பராமரிப்பு ஆகியவை இந்நோயாளிக்கு தேவைப்படும்.

புற்றுக்கட்டி அகற்றப்பட்ட பிறகு, நோயாளியின் மண்டையோடு மறுசீரமைக்கப்பட்டது. அதன் பின்னர், தோல் ஒட்டுகள், திசு மடிப்பு, திசு விரிவாக்கம் பயன்படுத்தி உச்சந்தலை பல கட்டங்களாகச் சரிசெய்யப்பட்டது. இறுதிச் சீரமைப்பு சிகிச்சையானது, நோயாளியின் தொடையிலிருந்து எடுக்கப்பட்ட திசுவின் ஒரு பகுதியைப் பயன்படுத்தி செய்யப்பட்டது.

இந்த செயல்முறையின் போது, நுரையீரலுக்குப் பரவியிருந்த புற்றுநோய் முடிச்சு ஒன்றும் அகற்றப்பட்டது. டெர்மடோஃபை ப்ரோசர்கோமா புரோட்யூபரன்ஸ் (DFSP) என்று அழைக்கப்படும் பாதிப்பு மிகவும் அரிதானது; பத்து லட்சம் பேரில் 1 முதல் 5 நபர்களை மட்டுமே இது பாதிக்கிறது.

இது குறித்து, மண்டைமுகத் தசை, அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை நிறுவனத்தின் (ICAPS) முன்னாள் இயக்குனர் டாக்டர் கிருஷ்ணமூர்த்தி பேசுகையில், “இது ஒரே கட்டத்தில் செய்யப்பட்ட அறுவை சிகிச்சை அல்ல. சிக்கலானதாக இருந்தது” என்றார்.

மண்டைமுகத் தசை, அழகியல் மற்றும் பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மையத்தின் (ICAPS) சிறப்பு நிபுணர் டாக்டர் ஷ்யாம்நாத் கிருஷ்ண பாண்டியன் கூறுகையில், இந்த நோயாளிக்கான சிகிச்சை நேர்வில், கட்டியை முழுமையாக அகற்றுவதற்கும் பாதுகாப்பான மறுசீரமைப்பிற்கும் இடையில் சமநிலையை ஏற்படுத்துவதுதான் மிகப்பெரிய சவாலாக இருந்தது, என்றார்.

சிம்ஸ் மருத்துவமனையின் தலைவர் டாக்டர் ரவி பச்சமுத்து கூறுகையில், “இந்த மகத்தான சாதனை, எங்கள் மருத்துவமனையின் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியிருப்பதைக் குறிக்கிறது. நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையை வழங்கும் எமது பணியாளர்கள் மற்றும் மருத்துவர்களைப் பற்றி நான் மிகவும் பெருமைப்படுகிறேன்,” என்றார்.

படிக்க வேண்டும்

spot_img