fbpx
Homeபிற செய்திகள்கோவை தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேனிலைப்பள்ளியில் மாநில அளவிலான எறிபந்து போட்டி

கோவை தியாகி என்.ஜி.ராமசாமி நினைவு மேனிலைப்பள்ளியில் மாநில அளவிலான எறிபந்து போட்டி

கோவையில் மாநில அளவிலான எறி பந்து சாம்பியன்ஷிப் போட்டி கள் இன்று தொடங்கு கிறது. இதனை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.

தமிழ்நாடு எறிபந்து கழகம் மற்றும் கோவை மாவட்ட யுனிக் எறிபந்து கழகம் இணைந்து நடத்தும் 21வது மாநில அளவிலான எறிபந்து சாம்பியன்ஷிப் போட்டி இன்று (28ம் தேதி) முதல் அக்டோபர் 1ம் தேதி வரை கோவை வரதராஜபுரம் தியாகி என்.ஜி.இராமசாமி நினைவு மேனிலைப்பள்ளியில் நடைபெற உள்ளது.

இதில் தமிழக முழுவ தும் உள்ள 30க்கும் மேற் பட்ட மாவட்டங்களில் இருந்து ஆண்கள் மற்றும் பெண்கள் அணியினர் கலந்து கொள்ள உள்ளனர். இந்த போட்டிகள் இன்று மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.

துவக்கவிழாவிற்கு இந்திய எறிபந்து பெடரே ஷன் பொருளாளர் டி.பாலவிநாயகம் தலைமை தாங்குகிறார். போட்டி களை கோவை மாநகர காவல் ஆணையர் வி.பாலகிருஷ்ணன் துவக்கி வைக்கிறார்.

ஓய்வுபெற்ற கஸ்டம்ஸ் துணை கமிஷனரும் fistball பெடரேஷன் மூத்த துணைத் தலைவருமான எம்.அழகேசன், மாவட்ட விளையாட்டுக் கல்வி ஆய்வாளர் டாக்டர் எம்.குமரரேசன், டி.என். ஜி.ஆர். நினைவு மேல் நிலைப்பள்ளி தலைமை ஆசிரியரும் கோவை மாவட்ட யூனிக் எறி பந்து கழக ஆலோசகரு மான ஜி.சதா சிவன், ரத்தினம் குரூப் நிறுவங் களின் தலைமை நிர்வாக அலுவலரும் செயலாள ருமான டாக்டர் ஆர்.மாணிக்கம், ஜே.ஆர்.டி ரியல் டார்ஸ் சேர்மன் டாக்டர் ஜே.ராஜேந்திரன், பெரியநாயகி அம்மன் மெட்ரிக் பள்ளி தாளாளரும் யூனிக் எறிபந்து கழக துணைத்தலைவருமான சி.மோகன்ராஜ், லயன் பி.எஸ்.செல்வராஜ், திமுக மாவட்ட இளைஞரணி சிங்கை எஸ்.மதன், டிஎன்டிபிஏ பொதுச்செயலாளர் எஸ்.ராஜா, ஸ்ரீரேணுகா ஹைடெக் பிரிக்ஸ் மேனேஜிங் பார்ட்னர் லயன் டி.கோபால கிருஷ் ணன், உதவி பேராசிரியர் டாக் டர் டி.யுவராஜா, தி சென்னை ஆப்டிக்கல்ஸ் சிஇஒ ஆர்.ஆர்.கௌரி சங்கர், பொள்ளாச்சி ஸ்ரீ கிருஷ்ணா வித்யாலயம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மேனேஜிங் டைரக்டர் கே.கீர்த்திகிரி அனந்த கணேசன், முத்தையா தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள்.

போட்டிகளின் நிறைவு விழாவும் பரிசளிப்பு விழாவும் அக்டோபர் 1ம் தேதி காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. டி.பால விநாயகம் தலைமையில் நடக்கும் இந்த விழாவில் சிங்காநல்லூர் சரக காவல் உதவி ஆணையாளர் ஆர்.பார்த்திபன் பரிசுகளை வழங்குகிறார்.

படிக்க வேண்டும்

spot_img