உடல்நலக் கல்வியாளர்கள் மேம்பாட்டு அறக்கட்டளை சார்பாக ஐம்பெருவிழா திருச்சியில் இ.ஆர் மேல் நிலைப்பள்ளியில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழகத்தில் உடற்கல்வி துறையில் சிறப்பாக செயல்பட்ட ஆசிரியர்களுக்கு விருது வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விருது வழங்கி பாராட்டினார்.
இதில் கோவை புலியகுளம் புனித அந்தோணியார் உயர் நிலைப் பள்ளியில் உடற்கல்வி ஆசிரியரரும், தேசிய மாணவர் படை அலுவலருமான ஞா.ஆல்பர்ட் அலெக்ஸ்சாண்டருக்கு பணியினை பாராட்டி “வாழ் நாள் சாதனையாளர்” என்ற விருதை வழங்கி அமைச்சர் கவுரவபடுத்தினார்.
விருது பெற்ற ஆசிரியருக்கு பள்ளியின் தாளாளர், தலைமையாசிரியை, ஆசிரிய ,ஆசிரியைகள் மற்றும் மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.