கோவை கொடிசியா வளாகத்தில் “ சப்கான் 2023” என்ற தலைப்பில் 8-வது தொழிற்கண்காட்சி வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது.
வருகிற 12ந்தேதி முடிய 3- நாட்கள் நடைபெறும் இந்த கண்காட்சியில் சிறப்பு அழைப்பாளராக தெலுங்கானா பாதுகாப்புத்துறை ஆய்வு மற்றும் மேம்பாட்டு ஆய்வகம் இயக்குனர் டாக்டர் ஜி.ஏ.சீனிவாச மூர்த்தி கலந்து கொண்டு தொழிற் கண்காட்சியை தொடங்கி வைக்கிறார்.
இதுகுறித்து சப்கான் 2023 தலை வர் சஞ்சீவிகுமார், கொடிசியா தலைவர் வி.திருஞானம், செயலாளர் சசிகுமார், சப்கான் உதவி தலைவர் சீனிவாசன் ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:
கோவை கொடிசியா வளாகத்தில் வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை கொடிசியா இண்டெக் டெக்னாலஜி சென்டர் சார்பில் 8 – வது பதிப்பு தொழிற்கண்கட்சி நடைபெறுகிறது. இதில் 15 பொதுத்துறை நிறுவனம், 17 பெரிய தனியார் தொழிற்சாலைகள், வங்கி மற்றும் 214 நிறுவனங்கள் பங்கேற்கின்றன.
இதன்மூலம் பொதுத்துறை நிறுவனங்களும் பெருநிறுவனங்களும் தேவையான தகுதியுள்ள சிறு தொழிற்சாலைகளை தேர்ந்தெடுக்க உள்ளன. அதேநேரத்தில் சிறு, குறு மற்றும் நடுத்த தொழில் நிறுவனங்களும் ஆர்டர்களை பெறுவதற்கு தங்களை காட்சிப்படுத்த உள்ளன. மேற்கண்டவாறு அவர்கள் கூறினார் கள்.



