திருவண்ணாமலை மாவட்டத்தில் பள்ளி கல்வித் துறை சார்பாக 63-வது குடியரசு தின விழா மாநில அளவிலான தடகள போட்டிகள் நடைபெற்றன.
போட்டியில் கோவை சி.எஸ்.ஐ.ஆண்கள் மேல்நிலை பள்ளியில் 12-ம் வகுப்பு மாணவர் சாம் வசந்த் 200 மீட்டர் தூர ஓட்டத்தில் முதலிடமும்,100 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாம் இடமும் பிடித்து பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
பதக்கம் வென்ற மாணவன் சாம் வசந்திற்கு சி.எஸ்.ஐ.பள்ளி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது.
கோவை திருமண்டல பேராயர்
இதில் கோவை திருமண்டல பேராயர் திமோத்தி ரவீந்தர் மாணவரை பாராட்டி பேசும்போது, இது போன்ற ஒரு சாதனையை இந்த பள்ளியில் பயிலும் மாணவன் முதல் முறையாக நிகழ்த்தி உள்ளது பெருமை அளிக்கிறது என்றார்.
சாம் வசந்திற்கு பேராயரம்மா ஆனி ரவீந்தர், பள்ளித் தாளாளர் பிரின்ஸ் கால்வின், பள்ளி முதல்வர் மெர்சி மெட் டில்டா, பயிற்சி கொடுத்த உடற்கல்வி இயக்குநர் ராஜா மணவாளன் ஆகியோர் பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனர்.