தலைமைத்துவ குணம், திறன்மிகுந்த மாணவ, மாணவிகளை உருவாக்கும் கோவை ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி திகழ்கிறது என அப்பள்ளியின் முன்னாள் மாணவரும் ஓய்வுபெற்ற லெப்டினன்ட் ஜெனரலுமான கிரிஷ் பெருமிதத்துடன் தெரிவித்தார்.
கோவை ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியின் ஆண்டு விழா த்ரீ டாட்ஸ் அண்ட் ஏ டேஷ் (Three Dots And A Dash) என்னும் தலைப்பில் நடைபெற்றது. இதில் 1953 ஆம் ஆண்டு படித்த முன்னாள் மாணவராகிய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கிரிஷ் சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். விழாவில் அவரது துணைவியார் ஜோதியும் கலந்து கொண்டார்.
கோவையில் நூற்றாண்டுகளை கடந்த பள்ளியாக அவினாசி சாலையில் உள்ள ஸ்டேன்ஸ் பள்ளி செயல்பட்டு வருகின்றது. கோவையில் ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி ஆண்டு விழா, பள்ளி வளாகத்தில் வெகு விமரிசையாக நடைபெற்றது.
த்ரீ டாட்ஸ் அண்ட் ஏ டேஷ் (Three Dots And A Dash) எனும் தலைப்பில் நடைபெற்ற விழாவிற்கு ஸ்டேன்ஸ் பள்ளியின் தாளாளர் பிலிப் ஆர்.ஜே. ஃபௌலர் தலைமை தாங்கினார். முன்னதாக அனைவரையும் பள்ளி முதல்வர் ஐலின் ஜெத்ரோ வரவேற்று பேசினார்.
நிகழ்ச்சியில் பேசிய ஓய்வு பெற்ற லெப்டினன்ட் ஜெனரல் கிரீஷ், இந்த பள்ளியில் பயின்ற முன்னாள் மாணவர் என்பதில் தாம் பெருமிதம் கொள்வதாக கூறி, கடந்த 1953 ஆம் ஆண்டு முதல் 1961 வரை தாம் பள்ளியில் பயின்றதை நினைவு கூர்ந்தார்.
இந்த பள்ளியில் பயின்ற மாணவர்கள், அவர்களின் மதிப்புகள், பொறுப்புகள், தலைமைத்துவ குணங்கள் மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் திறன்களை அறிந்து கொள்ளும் வகையில் திறமையான மற்றும் அனுபவம் வாய்ந்த ஆசிரியர்கள், நிர்வாகப் பணியாளர்கள் இங்கு இருப்பதாகவும் மாணவர்கள் கல்வி பயிலும் போது தாங்கள் பெற்ற திறமைகளை சிறந்த முறையில் பயன்படுத்தி நமது நாட்டின் வளர்ச்சியில் பங்கு பெற வேண்டும் எனவும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.
தொடர்ந்து நடைபெற்ற விழாவில், ஸ்டேன்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளியில் பயின்று சிறந்த மதிப்பெண்கள் பெற்ற மாணவ, மாணவிகளுக்கும் விளையாட்டு, கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்ட போட்டிகளில் வென்றவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
நிகழ்ச்சியில், கருவூலர் டாக்டர் ஜேம்ஸ் ஜே. ஞானதாஸ், ஸ்டேன்ஸ் சிஙிஷிணி பள்ளி முதல்வர் ஐலின் ஜெத்ரோ, ஸ்டேன்ஸ் ஆங்கில இந்தியன் உயர்நிலை பள்ளி முதல்வர் செலின் வினோதினி, ஸ்டேன்ஸ் பள்ளி முதல்வர் (designate) ஜான் ஸ்டீபன், ஸ்டேன்ஸ் ICSE / ISC பள்ளியின் முதல்வர் ஜெனெட் ஜெயப்பிரகாஷ், ஸ்டேன்ஸ் இன்டர்நேஷனல் பள்ளி முதல்வர் ஜார்ஜினா, முதன்மை நிர்வாக அதிகாரி வி.எம்.ஜான் உட்பட பெற்றோர்கள், முன்னாள் மாணவர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.



