fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கண்காட்சி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் கண்காட்சி

ஸ்ரீராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் ஆராய்ச்சி மற்றும் புதிய கண்டுபிடிப்பு மையமானது, இன்ஸ்டியூட் ஆப் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் இன்ஜினியர்ஸ், எஐசிடிஇ ஐடியா லேப் மற்றும் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் குழு ஆகியவற்றுடன் ஒருங்கிணைந்து புதிய கண்டுபிடிப்புக்கான கண்காட்சி கல்லூரி வளாகத்தில் நடத்தியது.

கல்லூரி முதல்வர் என்.ஆர் அலமேலு தலைமை தாங்கினார்.
கோவை கேப்ஜெமினி சொல்யுஷன்ஸ் ஆர்க்கிடெக்ட் நிபுணர் சிவகார்த்திகேயன், குளோபல் சாஃப்ட்வேர் டெக்னாலஜிஸ் சொல்யுஷன்ஸ் ஆர்க்கிடெக்ட் நிபுணர் சுஸ்மிதா ராஜேந்திரன், கோவை ராபர்ட் பாஷின் மூத்த மென்பொருள் பொறியாளர் கைலாஷ் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர். மெக்கானிக்கல் எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், தகவல் தொழில்நுட்பம், ஆர்டிபிசியல் இன்டெலிஜென்ஸ் அண்ட் டேட்டா சயின்ஸ் துறைகளில் சார்பில் சுமார் 400 பேர் 102 குழுக்களாக பங்கு பெற்று தங்களின் படைப்புகளை கண்காட்சியில் வைத்திருந்தனர் .

திட்ட திறன்களின் பல்துறைத்திறனை ஊக்குவிக்கும் வகையில் சிறந்த வடிவமைப்பு, சிறந்த கண்டுபிடிப்பு, உயர் சமூக தாக்கம், ஸ்டார்ட் அப் ஸ்கோப் மற்றும் சிறந்த குழு விளக்கக்காட்சி ஆகிய வற்றை கருத்தில் கொண்டு சிறப்பாக வடி வமைத்த முதல் மூன்று குழுக்களுக்கு சிறப்பு விருந்தினர்கள் மதிப்பீடு செய்து பாராட்டு பரிசு மற்றும் சான்றிதழ்களும் வழங்கினர்.

கல்லூரி தொழில்துறை இணைப்பின் தலைவர் கணேஷ், ஆராய்ச்சி மையத்தின் உறுப்பினர்கள், துறை தலைவர்கள் கலந்து கொண்டனர்

படிக்க வேண்டும்

spot_img