fbpx
Homeபிற செய்திகள்ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி - கே.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி – கே.எஸ்.ஆர். கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை ஸ்ரீ ராம கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியுடன், திருச்செங்கோடு கே.எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்திக் கொண்டது.

எஸ்.என்.ஆர். சன்ஸ் அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் டி.லட்சுமி நாராயணசுவாமி, கே.எஸ். ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி தலைவர் ஆர்.சீனிவாசன் ஆகியோர் அவ்வொப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சி

கோவை நவ இந்தியா ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல் லூரியில் நேற்று (11ம் தேதி) நடைபெற்ற புரிந்துணர்வு ஒப்பந்தம் பரிமாற்ற நிகழ்ச்சியில், ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லுரி முதல்வர் மற்றும் செயலர் முனைவர் பி.எல்.சிவக்குமார், திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் முனைவர் வி.ராதாகிருஷ்ணன் ஆகியோர் அவ்வொப்பந் தத்தைப் பரிமாறிக் கொண்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், “இரு கல்வி நிறுவனங்களின் ஒருமித்த விருப்பத்தின் அடிப்படையில் பேராசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான ஒருங்கிணைந்த கற்றல் கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் மேற்கொள்ளப்பட உள்ளன. கூட்டு ஆராய்ச்சி, தொழில்நுட்ப உதவிகள், கல்வி உபகரணங்கள் பரி மாறிக் கொள்ளப்பட உள்ளன.

கருத்தரங்குகள், பயிலரங்குகள், ஆசிரியர் மேம்பாட்டு பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன. ஒப்பந்தத்தின் போது, ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் வி.விஜயகுமார், துணை முதல்வர் முனைவர் எஸ்.தீனா, அகமதிப்பீட்டுக் குழு மற்றும் தேசிய தர நிர்ணயக்குழு ஒருங்கிணைப்பாளர்கள் முனைவர் என்.உமா, முனைவர் ஐ.பர் வீன் பானு, முனைவர் வி.கிருஷ்ணபிரியா, கே.எஸ்.ஆர். கலை அறிவியல் கல்லூரி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் முனைவர் எம்.பிரசாத், வணிகவியல் துறைத்தலைவர் முனைவர் எஸ்.மகேஷ்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

படிக்க வேண்டும்

spot_img