fbpx
Homeபிற செய்திகள்‘மனித சமுதாய வளர்ச்சியில் கல்விக்கு அதிக பங்கு’: கருத்தரங்கில் தகவல்

‘மனித சமுதாய வளர்ச்சியில் கல்விக்கு அதிக பங்கு’: கருத்தரங்கில் தகவல்

வாழ்க்கையை மதிப்பிடும் கலை, சகிப்புத்தன்மை, வாய்ப்புகளைத் தோண்டி மனித சமுதாயத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பதில் கல்விக்கு அதிக முக்கியத்துவம் உள்ளது என்று குஜராத் ராஜ்கோட் ஆத்மியா பல்கலைக்ககழக சார்பு வேந்தர் டாக்டர் ஷீலா ராமச்சந்திரன் பேசினார்.

உயர்கல்வியின் போக்குகள் – நுண்ணறிவு, சவால்கள் மற்றும் வாய்ப்புகள் என்ற தலைப்பின் கீழ் ஸ்ரீராமகிருஷ்ணா கலைக் கல்லூரி சார்பில் கருத்தரங்கு நடந்தது.
தொழில்துறைக்கும் கல்வித் துறைக்கும் இடையிலான ஆற்றல்மிக்க ஒத்துழைப்பு பற்றிய நுண்ணறிவு குறித்து எடுத்துரைக்கப்பட்டது.

தேசிய கல்விக் கொள்கை மற்றும் அடிப்படைக் கொள்கைகள்

திருத்தப்பட்ட அங்கீகார கூட்டமைப்பு, தொழில்நுட்பம், தொழில்துறைக்கான வாய்ப்புகள் மற்றும் சவால்கள் 5.0 தரநிலைகள், தரத்தை உயர்வாக உறுதிபடுத்தும் தேசிய கல்விக் கொள்கை மற்றும் அடிப்படைக் கொள்கைகள் பற்றி அந்தந்த துறை சார்ந்த நிபுணர்கள் கோவை, மெஸ்ஸர் கட்டிங் சிஸ்டத்தின் நிர்வாக இயக்குநர் என்.மணி, கேரள சென்ட்ரல் பல்கலைக்கழக டாக்டர் கே. தியாகு, பாரதியார் பல்கலைக்கழக IQAC ஒருங்கிணைப்பாளர் டாக்டர் என். பொன்பாண்டியன், வாயூத் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் டாக்டர் நித்யானந்தன் தேவராஜ், ஜான்சன்ஸ் ஸ்கூல் ஆப் பிசினஸ் இயக்குநர் டாக்டர் ஏ.ஜி.நாராயணன் ஆகியோர் பேசினர்.

உள்கட்டமைப்பு மற்றும் உள்ளடக்க உற்பத்தியின் முக்கியத்துவம், இடையே உள்ள முக்கிய தடைகள், தொழில் நிறுவன இணைப்பு உள்ளிட்டவை பற்றி கருத்தரங்கில் விவாதிக்கப்பட்டன.

படிக்க வேண்டும்

spot_img